முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்லாந்து ஆசஸ் கொல்கத்தா ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

புதன்கிழமை, 17 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கேப்டவுன், அக். 17 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத் தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. கேப்டவுனில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், கேப்டன் காம்பீர் மற்றும் பிஸ்லா இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம்  இறங்கிய அந்த அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 6 விக்கெட்  இழப்பிற்கு 137 ரன்னை எடுத்தது. 

கொல்கத்தா வீரர் பிரண்டன் மெக்குல் லம் அதிகபட்சமாக 35 பந்தில் 40 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். துவக்க வீரர் பிஸ்லா 24 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவு ண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, யூசுப் பதான் 19 பந்தில் 22 ரன்னையும், ஷாகிப் அல் ஹசன் 15 ரன்னையும் எடு த்தனர். 

ஆக்லாந்து அணி சார்பில் அசார் மெக் மூத் 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மில்ஸ், பேட்ஸ் மற்று ம் ஹிரா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

ஆக்லாந்து அணி 138 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொல்கத்தா அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி எளிதாக ஆடி 17. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற் கு 138 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் ஆக் லாந்து ஆசஸ் அணி 7 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெ ற்றியின் மூலம் அந்த அணிக்கு 4 புள்ளி கள் கிடைத்தது. 

ஆக்லாந்து அணி தரப்பில் ஆல்ரவுண்ட ர் அசார் மெக்மூத் அதிரடியாக ஆடி 42 பந்தில் 51 ரன்னை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ச ர் அடக்கம். தவிர, குப்டில் 26 பந்தில் 25 ரன்னையும், எல். வின்சென்ட் 12 பந்தி ல் 30 ரன்னையும், ஏ. கிட்சென் 15 பந்தி ல் 24 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில், இளம் சுழ ற் பந்து வீச்சாளரான சுனில் நரீன் 24 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர பாலாஜி 1 விக்கெட் எடுத்தார்.இ ந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பாக். ஆல்ரவுண்டர் அசார் மெக்மூத் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago