முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆஸி. பிரதமர் விழுந்தார்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

புது டெல்லி, அக். 19 - இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல்வெளியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார். நல்லெண்ணப் பயணமாக டெல்லி வந்துள்ளார் கிலார்ட். நேற்று முன்தினம் அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றார். அப்போது அவர் புல்வெளியில் நடந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்து அவரது பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். இருப்பினும் சுதாரித்து எழுந்து விட்ட கிலார்ட், இட்ஸ் ஓ.கே. என்று கூறிபடி தொடர்ந்து நடந்தார். பின்னர் புன்னகைத்தபடி, எனக்கு ஒன்றும் ஆகவில்லை. எனது செருப்பு புல்லில் சிக்கிக் கொண்டு விட்டது. அதனால்தான் விழுந்து விட்டேன் என்று கூறிச் சமாளித்தார். கிலார்ட், சரியான செருப்பைப் போடாத காரணத்தால்தான் இப்படி அடிக்கடி கீழே விழுகிறார். அவர் ஷூ அணிந்தால் இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்