முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20: சென்னை அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குமா?

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், அக். 20  - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று நடக்க இருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன் ஸ் அணியும் மோத உள்ளன. 

சென்னை அணி இதுவரை 2 தோல்வி அடைந்துள்ளது. எனவே இன்று நடக்க இருக்கும் ஆட்டத்தில் அந்த அணி வெ ற்றி பெற்றால் தான் அரை இறுதி வாய்ப்பு இருக்கும். 

கேப்டன் தோனி தலைமையிலான செ ன்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்று ம் 2011 -ம் ஆண்டுகளில் இந்தியன் பிரீ மியர் லீக் பட்டமும், 2010 -ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டமும் வென்றது. இதனால் அந்த அணிக்கு பெரும் புகழ் கிட்டியது. 

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தனது பெயரை தக்கவைக்க முடி யவில்லை. ஏனெனில் இந்தப் போட்டி யில் அந்த அணி அடுத்தடுத்து 2 தோல் வி பெற்றது. 

தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை அணி முதல் ஆட்ட த்தில் சிட்னி சிக்சர்சிடம் 14 ரன் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தது. அடுத்ததாக லயன்ஸ் அணியிடம் 6 விக் கெட் வித்தியாசத்தில் தோற்றது. எனவே தற்போதைய நிலையில் கேப்டன் தோனி விசேசமாக ஏதாவது நடவடி க்கை எடுத்தால் தான் அரை இறுதிக்கு சென்னை கிங்ஸ் நுழைய முடியும். 

கேப்டன் ஹர்பஜன் சிங் தலைமையி லான மும்பை அணியும் இந்தப் போட்டியில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை. நடப்பு சாம்பியனான அந்த அணி முதல் ஆட்டத்தில், லயன்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. யார்க்ஷயர் அணிக்கு எதிரா  ன 2-வது ஆட்டம் மழையால் கைவிட ப்பட்டது. 

அரை இறுதிக்கு முன்னதாக மேற்படி 2 அணிகளும் இன்னும் 2 ஆட்டத்தில் ஆட உள்ளன. இதில் இரு அணிகளும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றால் தான் அரை இறுதி வாய்ப்பு இருக்கும். வரு ண பகவானும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

முதல் ஆட்டத்தில் சென்னை அணி தர ப்பில் டூபிளிசெஸ் மற்றும் சுரேஷ் ரெய் னா இருவரும் நன்கு பேட்டிங் செய்த னர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. 

அதே போல அந்த அணியின் பெளலர் களும் சிறப்பாக பந்து வீச வில்லை. முதல் 2 ஆட்டத்தில் 185 மற்றும் 159 ரன் னை விட்டுக் கொடுத்தனர். 

எனவே மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற வேண்டுமானால் அந்த அணியின் பெளலர்கள் சிக்கனமாக பந் து வீச வேண்டும். 

சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் மும்பை அணியும் முதல் வெற்றி பெற துடிக்கிறது. இதற் காக புதிய வியூகம் அமைத்து வருகிறது. 

மும்பை அணி முதல் 2 ஆட்டத்தில்  லயன்ஸ் மற்றும் யார்க்ஷயர் அணிகளு டன் மோதி முறையே 157 மற்றும் 156 ரன்னை எடுத்தது. 

மும்பை அணியில் டிவைன் பிராவோ நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் நட்சத்திர வீரரான டெண்டுல் கர் சரியாக ஆடவில்லை. 

எனவே இன்றைய போட்டியில் சச்சின் சிறப்பாக ஆடி அதிக ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்களும் தங்களது திற னை நிரூபிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்