முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை திரீஷா தந்தை மரணம்

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத்,அக்.20 - பிரபல  நடிகை திரீஷாவின் தந்தை கிருஷ்ணன். நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்த அவருக்கு வயது 68. நடிகை திரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் பணி புரிந்த கிருஷ்ணன் மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காக ஐதராபாத் போனாராம்.

  ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் திரிஷா. திரீஷாவும் அவரது அம்மாவும் பலமுறை அழைத்தும் கிருஷ்ணன் இவர்களோடு வசிக்க வில்லை. தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று கூறி அவர் தனியே வசித்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே ஓட்டல் ஊழியர்கள் அவரை அவசரஅவசரமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து போனார். இதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்