முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் மதுரை-துபாய் விமான சேவை: அஜீத்சிங்

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

கீழக்கரை.அக்.21 - சிலதினங்களுக்கு முன் துபாயில் தென்தமிழக மக்களின் பல்லாண்டு கால கனவான மதுரையிலிருந்து நேரடியாக துபாய் சார்ஜா போன்ற வளைகுடாபகுதிகளுக்கு விமானசேவை தொடங்குவது தொடர்பாக ஏர்இந்தியா நிறுவனம் அமீரக தமிழ்அமைப்புகள் பங்கு பெற்ற ஆலோசனைக்கூட்டம் ்.டி.ஏ அஸ்கான்நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றது.

 

இந்நிலையில் அமீரகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள்சார்பில் நேற்று முன்தினம்(வெள்ளி) துபாய்க்கு வருகைபுரிந்த மத்திய விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங்கைநேரில் சந்தித்து மதுரையிலிருந்து துபாய் சார்ஜா போன்ற வளைகுடா பகுதிகளுக்கு விமானசேவைதுவங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர் மனுவைபெற்றுகொண்ட அமைச்சர் இதுதொடர்பாக விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார் அவருடன் அமீரகத்திற்கான இந்திய துாதர் எல்.கே.லோகே'; உடனிருந்தார்.

 

முன்னதாக அமைச்சருக்கு புங்ைகொத்துகொடுத்து மாலைஅணிவித்து வரவேற்றனர் இதில் ;்.டி.ஏ அஸ்கான் தலைமைஅலுவலக மேலாளர்மீரான். ்.டி.ஏ பராப்ரடீஸ் நிதிதுறை பொதுமேலாளர்பாலசுப்ரமணியன் மற்றும் காயிதேமில்லத்பேரவை பொருளாளர்ஹமீது ரஹ்மான் துபாய்தமிழ்சங்கதலைவர் அமுது பொருளாளர்நயீம் வானலைவளர்தமிழ்சங்க தலைவர்மற்றும்பன்னாட்டுஇஸ்லாமிய இலக்கிய கழக இணைசெயலாளர்கீழைராசா. ்மான்விழாக்குழு செயலாளர்ஹமீதுயாசின் உள்ளிட்டபலர்கலந்து கொண்டனர்.

 

படம்விளக்கம். துபாய்அமீரகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள்சார்பில் நேற்று முன்தினம்(வெள்ளி) துபாய்க்கு வருகைபுரிந்த மத்திய விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங்கைநேரில் சந்தித்து மதுரையிலிருந்து துபாய் சார்ஜா போன்ற வளைகுடா பகுதிகளுக்கு விமானசேவைதுவங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்