முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக். 25 - அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6 ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் ஒபாமாவும், மிட் ரோம்னியும் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். இதில் வெற்றி வாய்ப்பு ஒபாமாவுக்கே என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் வேட்பாளர் விவாதத்தில் ஒபாமாவும், மிட்ரோம்னியும் ஒரே மேடையில் அமர்ந்து விவாதித்தனர். அதை லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும், டி.வி. மூலமும் பார்த்தனர். இதை தொடர்ந்து யாருக்கு ஆதரவு என பொதுமக்களிடம் சி.என்.என் கருத்து கணிப்பு நடத்தியது. முதல் சுற்றில் மிட்ரோம்னியும், 2வது சுற்று விவாதத்தில் ஒபாமாவும் வெற்றி பெற்று இருந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த 3 வது சுற்று விவாதத்தில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் ஒபாமாவின் வெளியுறவு கொள்கைகளை மிட்ரோம்னி ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், மிட்ரோம்னிக்கு 40 சதவீத ஆதரவு உள்ளதாகவும் கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்