முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.12 - ஜனநாயகத்தை காக்க, தொழில்துறை விவசாயம், கல்வியியல் முன்னேற்றம் காண, மாநில உரிமைகளை நிலைநாட்ட, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, மகளிர் மேம்பாடு, மீனவ மக்களின் துன்பங்கள் தீர, 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நீதி கிடைக்க, முன்னேற்ற பாதையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ அ.தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு வாக்களித்து பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென தமிழக வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!

எனது அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

தமிழ் நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் என்றைக்கு வரும் என்று மிகுந்த ஆவலோடும், எதிர்பார்ப்போடும் தமிழர்கள் காத்துக் கொண்டிருந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள், ஏப்ரல் 13ஆம் தேதி என்பதை உங்கள் அனைவரின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

என்றைக்கு வாக்குப் பதிவு நாள் வருமோ? என்ற ஆவல் தமிழக மக்களாகிய உங்களிடம் மேலோங்கி இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.  கடுமையான விலைவாசி உயர்வு.  ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாமல், நிரந்தரமான மாத சம்பளம் பெறுபவர்கள் கூட நிறைவான வாழ்வு வாழ முடியாத வண்ணம் எல்லா வகையான செலவுகளும் பலமடங்கு உயர்ந்துவிட்டன.  சட்டம்​ஒழுங்கு நிலை குறித்து தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள்; கவலைப்படுகிறார்கள்.  `தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் இப்படி கொள்ளை போகின்றனவே? இதற்கு ஒரு முடிவு வராதா? அமைதியான வாழ்க்கை என்றைக்கு அமையுமோ?' என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவர் நெஞ்சிலும் ஏற்பட்டுவிட்டது.

உலக அரங்கில் நம் நாட்டுக்கே தலை குனிவை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் குறித்த புதுப் புது செய்திகள் உச்ச nullநீதிமன்றத்தில் இருந்தும், பல்வேறு அரசு அமைப்புகளிடமிருந்தும் வருவதை ஒவ்வொரு நாளும் படித்து இதற்கெல்லாம் நீnullதி சொல்லும் நாள் என்றைக்கு வருமோ என்று எல்லோரும் காத்திருந்தார்கள்.  

அந்த நாள் தான் ஏப்ரல் 13​ஆம் தேதி.  ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் வாக்குகள் வழியாக சொல்லும் தீர்ப்பு தான், மற்ற தீர்ப்புகளுக்கெல்லாம் முன்னோடியான தீர்ப்பு.   மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆட்சி நடத்தும் ஆற்றல் அ.தி.மு.க.வுக்குத் தான் உண்டு என்று தமிழக வாக்காளர்கள் அனைவரும் உறுதிபட நம்புகிறார்கள். 

கடந்த 19 நாட்களாக தமிழகத்தில் நான் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தில், மிகுந்த எழுச்சியோடும், நம்பிக்கையோடும் மக்கள் அளித்த வரவேற்பை பார்த்த போது, தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய வரலாறு படைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கண்கூடாகக் கண்டேன். 

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போதெல்லாம் தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.  தொழில் துறை மின் தட்டுப்பாடு இன்றியும், ஆளும் கட்சியினரின் அராஜக தொல்லைகள் இல்லாமலும் நிம்மதியாக வளர்ந்து வந்தது.  அத்தகைய பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும் என்றால், அ.தி.மு.க. உடன்பிறப்புகள் கட்டுப்பாடோடு தேர்தல் பணியாற்றி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.  அ.தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும், எல்லா தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். 

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 86 லட்சம் விவசாய குடும்பங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்த பெருமை அ.தி.மு.க. ஆட்சிக்கு உண்டு.  அத்தகைய நிம்மதியான வாழ்வு தமிழக விவசாயிகளுக்கு மீண்டும் அமைய அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வருவது மிகவும் அவசியமானது.  எனவே தான், தேர்தல் நாளில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னங்களுக்கும் மறவாமல் வாக்களித்து, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி முழுமையான வெற்றி பெற ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்வது அவசியம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.   எனவே, ஒற்றுமை உணர்வுடன், எந்தவிதமான பிணக்குகளுக்கும் இடமின்றி, எல்லாவற்றையும் விட எனக்கு என் நாடு பெரிது ; சுவரை வைத்துத் தானே சித்திரம் வரைய முடியும் ;  எனவே, எனது நாடு நன்றாக இருந்தால் தான், நான் நன்றாக இருக்க முடியும் என்ற பறந்த மனதுடன் ஜனநாயகக் கடமையாற்ற, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இத்தனை நாள் ஏங்கிக் காத்திருந்த வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 13ஆம் தேதி காலையிலேயே nullநீங்கள் ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாகச் சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.  உங்கள் உறவினர்களும், நண்பர்களும் ஓட்டளிக்க அவர்களுக்கு உற்சாகம் ஊட்டுங்கள்.  தேவையான ஆவணங்களுடன் சென்று கால தாமதத்திற்கு இடமின்றி வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் விதத்தை நன்கு புரிந்துகொண்டு உங்கள் வாக்குகளை உறுதியாக பதிவு செய்யுங்கள்.  

அதன் மூலம் தான் கள்ள ஓட்டுகளையும், மோசடி வாக்குப் பதிவுகளையும் தவிர்க்க முடியும்.  எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், தொழில் துறையிலும், விவசாயத்திலும், கல்வியிலும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், சட்டம்​ஒழுங்கு பராமரிப்பிலும், மகளிர் மேம்பாட்டிலும், முன்னேற்றப் பாதையில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியமைக்கவும், மீனவ மக்கள் கடந்த ஐந்தாண்டுகளாக சந்தித்து வந்த தொல்லைகள் நீங்கவும், இந்தத் தேர்தல் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு என்பதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்.  

நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற, ஜனநாயக தத்துவங்கள் மேலோங்கிய உண்மையான மக்களாட்சி அமைவது, நீnullங்கள் அளிக்கப் போகும் வாக்குகளில் தான் உள்ளது என்பதை உளப்nullர்வமாக உணர்ந்து ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்