முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரை இறுதி: சிட்னி சிக்சர்ஸ் டைட்டான்ஸ்-யை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

செஞ்சுரியன், அக். 28 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி யின் 2-வது அரை இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் டைட்டான்ஸ் அணியை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில், துவக்க வீரர் லம்ப், ஓகீபே ஆகியோர் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்களுக்கு பக்கபலமாக ஹென்ரிக்ஸ் மற்றும் ரோகெர் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின்  போது, ஸ்டார்க் நன்கு பந்து வீசி 2 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆதரவாக கும்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் ஹென்ரிக் ஸ் ஆகியோர் பந்து வீசினர். 

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் செஞ்சுரியன் நக ரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் டைட்டான்ஸ்  அணிகள் மோ தின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசி ல் வெற்றி பெற்ற டைட்டான்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் னை எடுத்தது. 

டைட்டான் அணி தரப்பில்,வைஸ் அதி கபட்சமாக 28 பந்தில் 61 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அட க்கம். துவக்க வீரர் டேவிட்ஸ் 44 பந்தில் 59 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, பெ கார்டியன் 14 ரன்னையும், குன் 13 ரன் னையும் எடுத்தனர். 

சிட்னி அணி சார்பில் ஸ்டார்க் 33 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கும்மின்ஸ், ஹென்ரிக்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர். 

சிட்னி அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை டைட்டான்ஸ் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி கடும் போராட்டத்திற்குப் பின்பு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 2-வது அரை இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் 2 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

சிட்னி அணி தரப்பில், லம்ப் 19 பந்தில் 33 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். ஓகீபே 21 பந்தில் 32 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். தவிர, மடின்சன் 15 பந்தி ல் 20 ரன்னையும், ஹென்ரிக்ஸ் 18 பந்தி ல் 28 ரன்னையும், ரோகெர் 25 பந்தில் 21 ரன்னையும், கும்மின்ஸ் 14 ரன்னையும் எடுத்தனர். 

டைட்டான்ஸ் அணி சார்பில் தாமஸ் 38 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, லிங்க்ஸ், பலாதி, ஜே. டிவி ல்லியர்ஸ் மற்றும் வான்டெர் மெர்வே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஓகீபே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்