முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் கங்குலி ஓய்வு பெற்றார்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

டெல்லி: அக், -30 - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடர்களில் ஆடி வந்த கங்குலி தற்போது, அதிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் அவரது கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி(40). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியை மிரட்டும் துவக்க வீரராக வலம் வந்தவர். சச்சினுடன் ஜோடி சேர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவரது சிறப்பான ஆட்டத்தை கண்டு, மஹாராஜா, தாதா, பிரின்ஸ் ஆப் ஆப் சைட் போன்ற பல பட்ட பெயர்களை பெற்றார். கடந்த 1992ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமான கங்குலி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் கேப்டன் பதவி வரை உயர்ந்தார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 3வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தவர். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி 16 சதங்கள், 35 அரைசதங்கள் அடித்து மொத்தம் 7,212 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 239 ரன்களை எடுத்து, சராசரியாக 52.53 ரன்கள் வைத்துள்ளார். அதேபோல 311 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி, 22 சதங்களும், 72 அரைசதங்களும் அடித்து மொத்தம் 11,363 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 183 ரன்கள் அதிகபட்சமாகவும், சராசரியாக 41.02 ரன்களும் எடுத்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அவ்வப்போது அணிக்கு கை கொடுப்பார். தனது மிதவேகப்பந்துவீச்சின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கங்குலி, உள்ள?ர் போட்டிகளை கொண்ட ஐபிஎல் தொடரில் பங்கேற்க துவங்கினார். துவக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கங்குலி 3 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டார்.
அப்போது கங்குலிக்கு, புனே வாரியர்ஸ் அணி கை கொடுத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் சிகிச்சை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் புனே வாரியர்ஸ் அணியை கங்குலி கேப்டனாக செயல்பட்டு வழிநடத்தினார். ஆனால் ஐபிஎல் தொடரில் அந்த அணி படுதோல்வி அடைந்தது.
இதிலும் மனம் தளராத கங்குலி, அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் ஆட போவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது தனது முடிவை மாற்றி கொண்டுள்ள கங்குலி, ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஐபிஎல் தொடரில் கடந்த 5 ஆண்டுகளாக நான் ஆடியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாட முடிந்தது. ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க நான் விரும்பவில்லை. என்னை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தேர்வு செய்ய வேண்டாம்.
இந்திய அணிக்காக இனி விளையாட முடியாது என்பதை அறிந்த பிறகு, முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவதை கடினமாக உணருகிறேன். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடும் போது, எனக்கு 41 வயது கடந்திருக்கும். இந்த நிலையில் அதிக எதிர்பார்ப்பு கொண்ட ஐபிஎல் தொடரில் என்னால் சிறப்பாக ஆட முடியாது. ஐபிஎல் தொடர்களில் எந்த பயிற்சியும் இல்லாமல் ஆட முடியாது என்பதால் தான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தேன் என்றார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 59 போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி 25.46 ரன்களை சராசரியாக கொண்டுள்ளார். ஸ்டிரைக் ரேட் 106.80 ரன்களை வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago