முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயிற்சி போட்டி இங்கிலாந்து அணி நிதானஆட்டம் கேப்டன் குக் அபாரசதம்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

மும்பை, நவ. - 1. - இந்திய ஏ அணிக்கு எதிராக மும்பையி ல் நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 2- வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்னை எடுத்தது. 2- வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் அலிஸ்டார் குக் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்ச மாகும். அவருக்கு பக்கபலமாக சுமித் படேல், டிராட் மற்றும் பீட்டர்சன் ஆகி யோர் ஆடினர். இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சி ல் 90 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 369 ரன் எடுத்து இருந்தது. அப்போது வினய் குமார் 25 ரன்னுடனு ம், அவானா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் குமார் ஆண்டர்சன் பந்தி ல் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இந்திய அணி அதே ஸ்கோரில் ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிரஸ்னன் 59 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். ஸ்வான் 90 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஆண்டர்சன் 2 விக்கெட்டும், படேல் 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி ரன்னை எடுத்தது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 87 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்னை எடுத் தது.
நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் அலி ஸ்டார் குக் அபாரமாக ஆடி சதம் அடி த்தார். அவர் 252 பந்தில் 112 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அட க்கம். அவருக்குப் பக்கபலமாக டிராட் மற்று ம் பீட்டர்சன் ஆகியோர் ஆடினர். டிரா ட் அரை சதம் அடித்தார். அவர் 95 பந் தில் 56 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்ட ரி அடக்கம். தவிர, பீட்டர்சன் 24 பந்தில் 23 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் சுமித் படேல் சிறப் பாக ஆடினார். அவர் 145 பந்தில் 82 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இரு ந்தார். இதில் 12 பவுண்டரி அட க்கம்.
இந்திய அணி சார்பில், யுவராஜ் சிங் 52 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, கேப்டன் ரெய்னா மற்றும் டிண்டா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்