முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - அமெரிக்கர்களின் வாக்குகளை சேர்க்க தீவிரம்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ. 2 - இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக சேர்க்க ஒபாமாவும், ரோம்னியும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதிபர் பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் தங்களது தீவிரப் பிரசாரத்தை மீண்டும் முடுக்கி விட்டுள்ளனர். சாண்டி புயல் காரணமாக இருவரின் தேர்தல் பிரசாரமும் சற்றே பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு இனக்குழுவின் வாக்குகளையும் கவரும் முயற்சியில் இருவருமே தீவிரமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்திய அமெரிக்கர்களை குறி வைத்துக் கிளம்பியுள்ளனர் இருவரும். இந்த வாக்கு வங்கி மிக முக்கியமானது என்பதால் இருவருமே அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

கிட்டத்தட்ட 30 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.எனவே இந்த வாக்கு வங்கி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்திய அமெரிக்கர்களைக் கவரும் வகையில் தற்போது பத்திரிக்கைகளில் முழுப்பக்க அளவிலான விளம்பரங்களை இருவருமே போட்டி போட்டு கொடுத்து வருகின்றனராம். இந்த விளம்பரங்களை அமெரிக்க நாளிதழ்களில் வெளியிடாமல், இந்திய அமெரிக்கர்களின் நாளிதழ்களிலேயே அவர்கள் வெளியிட்டு வருவதால் இந்திய அமெரிக்கர்களை சீக்கிரமே ்ஈர்க்க முடியும் என்பது அவர்களது திட்டமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்