முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ப்ராஸ் நவாஸ் மீது வழக்கு: ஜாவித் மியாண்டத்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி,நவ. 4 - அபாண்டமாக குற்றம் சுமத்தும் சர்ப்ராஸ் நவாஸ் மீது வழக்கு தொடருவேன் என்று முன்னாள் கேப்டன்ஜாவித் மியாண்டத் மிரட்டல் விடுத்து இருக்கிறார். 

லாயக்கில்லாத முன்னாள் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சேர்ப்பதற்கு மியாண்டத் தனது செல்வாக்கினை பயன்படுத்துகிறார் என்று சர்ப்ராஸ் நவாஸ் சமீபத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் கேப்டநான ஜாவித் மியாண்டத் மேற்கண்டவாறு மிரட்டல் விடுத்து இருக்கிறார். அவர் தஹ்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியாகவும் இருக்கிறார். 

நவாசின் இந்த குற்றச்சாட்டிற்கு டெஸ்ட் போட்டியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அதாவுர் ரஹ்மான் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிரித்து இருக்கிறார். 

துமுன்னாள் டெஸ்ட வீரர் அதாவுர் ரஹ்மான் கண்டனம் தெரிவித்த அடுத்த நாளிலேயே மியாண்டத் மேற்கண்டவாறு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்னாள் டெஸ்ட் வீரரான நவாஸ் சமீபத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தவிர, முன்னாள் டெஸ்ட் சுழற் பந்து வீச்சாளரான அக்ரம் ரஜாவை வாரியம் நடுவர் குழுவில் சேர்த்தது. 

மேலும், மற்ஹொரு வீரரான ரஹ்மானை படா ஏரியாவுக்கு பயிற்சியாளராக நியமித்தது. இதநைத் தொடர்ந்து நவாஸ் மேற்கண்ட குற்றச் சாட்டை தெரிவித்து இருக்கிறார். 

எனவே எதிர்காலத்தில் என்னபேச வேண்டும் என்பதை கவனமாக பேச வேம்டும் என்றும் மியாண்டத் நவாசிற்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். 

மேலும், இந்தப் பிரச்சினை குறித்உத நான் நவாசை 2 முஹையில் சந்திப்பேந். ஆநால் நான் அவருக்கு சொல்லிக் கொள்வதெல்லாம், தற்போது நீதித்து றை சுதந்திரமா க செயல்படுகிறது. எனவே அவர் மேலும் ஏதாவது குற்ஹம் சுமத்தினால் நான் வழக்கு தொடருவே ன் என்று ஜியோ சூப்பர் சேனலுக்கு அளித்த பேட்டியில் மியாண்டத் தெரி வித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்