முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டது

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் சென்ற வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து 3 நபர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:- 

சென்னை பெரவள்ளூர் கண்மணி நகர் அருகே நேற்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனியார் செக்யூரிட்டி வாகனம் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது அந்த வேன் நிற்காமல் போலீசார் மேல் மோதி விடுவது போல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வேனை விடாமல் துரத்தி சென்றனர். கண்மணி நகர் 46 வது தெருவில் ஆரம்பித்த துரத்தல் 54 வது தெரு வரை சென்றது. 54 வது தெருவில் போலீசார் அந்த தனியார் செக்யூரிட்டி வேனை மடக்கி பிடித்தனர். வேனிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற 3 நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். வேனின் முன்புற அறையை திறந்து பார்த்த போலீசாருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 

பல டிரங்கு பெட்டிகள் மற்றும் 2 பெரிய சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிய வந்தது. இதன் பேரில் வேனில் இருந்த அசோக்ராஜ், ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள் வந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில், அந்த வேன் தனியார் செக்யூரிட்டிக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பணம் யார் கொடுத்தது என்பது பற்றிய தகவல்களை தர மறுத்து விட்டனர். கோடிக்கணக்கான பணத்துடன் வாகனம் பிடிபட்ட தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி, பின்னர்  பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று பணம் கடத்தல் பற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி இந்தப் பணம் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக கொண்டு வந்த பணம். இல்லாவிட்டால் ஏன் போலீசார் தடுத்தும் நிற்காமல் தப்பி ஓட வேண்டும். ஆகவே, இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பணத்துடன் பிடிபட்ட 3 பேர்களிடமும் போலீசார் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago