முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் -சானியாமிர்சா

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத், நவ. - 5 - நான் ஓய்வு குறித்து சிந்திக்க வில்லை. இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் என்று டென்னிஸ் நட்சத்திர வீராங் கனையான சானியா மிர்சா தெரிவித் தார். ஐதராபாத் நகரில் வால்க் பார் பிட்னஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சானியா மிர்சா மேற்கண்ட வாறு கூறினார். மேலும், விளையாட்டும் உடற்தகுதியு ம் பள்ளி பாடத்துடன் ஒருங்கிணைந்த திட்டமாக இருக்க வேண்டும் என்பதை யும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா தற்போது சிறிது ஓய்வில் இருந்து வருகிறார். அவர் விரைவில் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆயத்தமாகி வருகிறார். அடுத்த சில வாரங்களில் அவர் கலப்பு இரட்டையர் பிரிவில் உலக நம்பர் - 1 வீரரான பாப் பிரையானுடன் இணைந்து ஆட இருக்கிறார். அமெரிக்காவின் நட்சத்திர வீரரான பிரையானுடன் இணைந்து ஆடுவதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையி ல் புதிய அத்தியாயம் படைக்க முடியும் என்று சானியா நம்பிக்கை கொண்டு இருக்கிறார். என்.டி. டி. வி. யும் நிர்மல் அமைப்பும் இணைந்து மார்க்ஸ் பார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதன் தூதராக ஐதராபாத் வீராங்கனையான சானியா இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சானியா ஓய்வு குறித்து தற்போது நான் சிந்திக்க வில்லை. இன்னமும் நான் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன். முடிந்த வரை தொடர்ந்து ஆடுவேன் என்றும் அவர் கூறினார். ஐதராபாத் விளையாட்டுத் துறையே சானியா மற்றும் சாய்னா நெக்வால் ஆகியோரை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இருவரும் ஒரே கா ல கட்டத்தில் ஆடுவது தனக்கு மகிழ்ச் சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், ஐதராபாத் நகரம் பெரும் விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளது. ஜெய்சிம்மா, அசாரூதீன் , வி.வி.எஸ். லக்ஷ்மண், கோபிசந்த், ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்க ள். இதில் நானும், சாய்னாவும் வெற்றி வேட்கையுடன் ஆடி வருவது மிகவும் சிறப்பாகும். நாங்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவதன் மூலம் திறமையா ன இளம் வீரர்கள் பலர் உருவாவார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினா ர். தங்களுக்கு அடுத்தபடியாக மகளிர் டெ ன்னிசில் யார் இந்த இடத்தை நிரப்பு வார்கள் என்று அவரிடம் கேட்ட போ து, அவர் வருத்தம் தெரிவித்தார். இந்தக் கேள்வி வருத்தம் அளிக்கிறது. எனக்கு அடுத்தபடியாக டாப் 300 அல் லது 200 இடத்தைப் பிடிக்கக் கூடிய வீராங்கனைகள் யாரும் இல்லை. திற மையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் முன்னேற முடிய வில்லை என்றார் அவர். சானியா மிர்சா 2 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் அவர் டென்னிஸ் அகாடமி ஒன்றை நிறுவி வருகிறார்.
-----------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்