முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்கள் பயமின்றி ஓட்டுபோடலாம் - தலைமை தேர்தல் ஆணையர்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - வாக்காளர் பயமின்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரிவின்குமார் கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் அவர்கள் மனச்சாட்சியின்படி யாருக்கும் பயப்படாமல் ஓட்டு போடலாம். ஓட்டு போடும்போது, நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கண்டுப்பிடிக்க முடியாது. யாரும் பயம் இல்லாமல் ஓட்டு போடலாம். எந்த பகுதியில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கண்டுப்பிடிக்க முடியாது. நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், யாரும் உங்களை பழிவாங்க முடியாது. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை கண்டுப்பிடிப்பது கடினம், வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டிருப்பதால், வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கலாம். 

9,500 வாக்கு சாவடிகளில் கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்தாலும், அதை கண்காணிக்கப்படும். 2,748 வேட்பாளர்கள் போட்டியிருக்கிறார்கள். பணம் பட்டுவாடா தொகுதிகளில் செய்து வருவதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிறையபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தனியார் நிறுவனங்களில் விடுமுறை அளிக்க வேண்டுமென்று கூறுயிருக்கிறோம். திரையரங்குகள், வர்த்தக மால்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க கூறியிருக்கிறோம். 240 துணை ராணுவ கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். ஒரு லட்சம் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கலாம். வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்றால், அந்த பகுதிக்கு சென்று ஏன் வாக்களிக்க வரவில்லை என்று ஆய்வு செய்து அவர்களை வாக்களிக்க அழைக்கப்படுவார்கள். பல இடங்களில் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளோம். பொதுமக்கள் தைரியமாக வந்து பணம் கொடுப்பதை பற்றி புகார் செய்திருக்கிறார்கள். அதுகுறித்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago