முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் யுவராஜ்சிங் இடம் பெறுவாரா?

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

போட்டியில் அதிரடி வீரரான யுவராஜ் சிங் இடம் பெறுவாரா? இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ் டார் குக் தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் தோ னி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே முதலில் 4 போட்டி க ள் கொண்ட டெஸ்ட் தொடர் , இரண்டு 20 -க்கு 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகி யவை நடக்க இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முத ல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 15 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டிக்கான தேர்வு வரும் திங்கட்கிழமை தேர்வுக் குழு புதி ய தலைவரான சந்தீப்பாடில் தலைமை யில் நடக்க இருக்கிறது. பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் டெஸ் ட் போட்டியில் இடம் பெற முயன்று வருகிறார். அவருக்கு கேப்டன் தோனி யின் ஆதரவும் உள்ளது. அவர் கடந்த வருடம் நுரையீரல் புற்று நோய்க்காக அமெரிக்காவில் சிகிட்சை எடுத்தார். இதனால் அவர் 9 மாத கால ம் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இலங்கையில் சமீபத்தில் டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த து. அதில் நீண்ட மாத இடைவெளிக்குப் பிறகு யுவராஜ் சிங் ஆடினார். ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது. யுவராஜ் சிங் உள் பட முன்னணி வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக ஆடவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து அணிக்கும், இந்தி ய ஏ அணிக்கும் இடையே மும்பையில் 3 நாள் பயிற்சி ஆட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற யுவராஜ் சிங் அரை சதம் (59)அடித்து அசத்தினார். அவர் 7 பவுண்டரியும், 4 சிக்சரும் அடித்தார். தவிர, 5 விக்கெட்டும் சாய்த்தார். இது கேப்டன் தோனிக்கு திருப்தி அளித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் வி.வி.எஸ். லக்ஷ்மணுக்கு பதிலாக பத்ரிநாத் சேர்க் கப்பட்டார். அவர் இடத்தை யுவராஜ் அல்லது ரெய்னா இருவரில் ஒருவர் நிர ப்பக் கூடும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரா ன பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கிய ரெய்னா வேக ப் பந்து வீச்சிற்கு எதிராக நன்றாக ஆட வில்லை. அவர் 20 மற்றும் 19 ரன் எடுத் தார். யுவராஜ் சிங்கிற்கு கேப்டன் தோனியி ன் ஆதரவு இருந்த போதிலும், தேர்வுக் குழுவினர் இன்னும் திருப்தி அடைய வில்லை. எனவே அவர் முதல் டெஸ்டி ல் இடம் பெறுவ து கேள்விக் குறியாக வே உள்ளது. யுவராஜ் சிங் கடந்த வருடம் கொல்கத் தாவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் கடை சியாக இடம் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago