முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஏமன் கால்பந்து போட்டி ரத்து!

சனிக்கிழமை, 10 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, நவ. - 10 - இந்தியா - ஏமன் நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இம்மாதம் 14 ம் தேதி அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடக்கவிருந்தது. இந்திய வீரர்களும் அறிவிக்கப்பட்டனர். ஏமன் நாட்டு கால்பந்து வீரர்களும் இங்கு வர தயாராக இருந்தார்கள். அதற்காக கல்ப் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட்டுகளும் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த விமான நிறுவனம் திடீரென அனைத்து டிக்கெட்டுகளையும் ரத்து செய்து விட்டது. இதனால் தங்களது வீரர்களால் வர முடியாது என ஏமன் கால்பந்து சங்கம் அறிவித்தது. இதையடுத்து இந்த போட்டி ரத்து செய்வதாக இந்திய கால்பந்து சங்கம் அறிவித்தது. ஆகவே இன்னொரு நாட்டு அணியை வரவழைத்து அதே தேதியில் கால்பந்து போட்டியை நடத்தவும் முயற்சி எடுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்