முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி இலங்கைஅணி அபாரவெற்றி

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

ஹம்பன்டோடா, நவ. - 12 - நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 4 -வது ஒரு நாள் கிரிக்கெட் போ ட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப் பற்றியது. இந்தப் போட்டியின் துவக்கத்தில் மழை பெய்தது. பின்பு நியூசி.யின் இன்னிங்சின் போதும் மழை பெய்தது. இதனால் மொத்த ஓவர்கள் 32 ஆகக் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இறுதி முடிவு எட்டப்பட்டது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோடா நகரில் உள்ள ராஜபக்சே சர்வதேச அரங்கத்தில் பக லிரவு ஆட்டமாக நடைபெற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் டாசி ல் வெற்றி பெற்ற இலங்கை அணி பீல் டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி சார்பில், நிகோல் மற்றும் வாட்லிங் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இறுதியில் நியூசிலாந்து அணி 32 ஓவரி ல் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்னை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில், பிரண்டன் மெக்குல்லம் அதிகபட்சமாக, 44 பந்தி ல் 30 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, வில்லியம்சன் 29 பந்தில் 21 ரன்னையு ம், பிராங்ளின் 37 பந்தில் 21 ரன்னையு ம், வாட்லிங் 15 ரன்னையும், மில்னே 12 ரன்னையும், நிகோல் 11 ரன்னையும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் இளம் சுழற் பந்து வீச்சாளரான மென்டிஸ் 15 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, குலசேகரா 2 விக்கெட்டும், பெரீரா மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இலங்கை அணி 131 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 26.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்னை எடுத்தது. இதனால் இலங்கை அணி இந்த 4-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண் ட இந்தத் தொட ரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை அணி தரப்பில், கீப்பர் சங்க க்கரா 55 பந்தில் 42 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். சண்டிமால் 65 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, உபுல் தரங்கா 28 பந்தில் 27 ரன்னை எடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான போல்ட் மற்றும் செளதீ இருவரும் தலா 32 ரன் னைக் கொடுத்து தலா 1 விக்கெட் எடு த்தனர். தவிர, எல்லிஸ் 1 விக்கெட் எடு த்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக மென்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago