முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி படத்துக்கு எதிர்ப்பு: விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு

புதன்கிழமை, 14 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.15 - துப்பாக்கி படத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் ரிலீசானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். மும்பையில் குண்டு வைக்கும் தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் அழிப்பது போன்று திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

இதுகுறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் நடித்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருந்தாலும், அந்த சம்பவத்தின் பின்னணியில் சில தீவிரவாத அமைப்புகள் இருந்தாலும், அதற்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. யாரோ சிலர் செய்யும் தவறுகளால் குறிப்பிட்ட மதமோ, சமுதாயமோ பொறுப்பாகாது. அப்படத்தில் முஸ்லிம் பெயர் தாங்கி நடித்துள்ளவர்களை தீவிரவாதிகளாக காண்பிப்பது முறையற்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை கடற்கரையோரம் அவரது வீடு இருக்கிறது. அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் வடபழனியில் உள்ள டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடு மற்றும் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

துப்பாக்கி படத்துக்கு தணிக்கை குழுவினர் `யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago