முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் பெண் அமைச்சர் சாகும்வரை உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர், ஏப்.14 - ராஜதான் மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் தனது  கணவருடன்  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை 2-வது நாளாக நீடித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் அமைச்சராக இருப்பவர் கோல்மா தேவி. இவர் மலைவாழ் மக்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் போதுமான வருமானம் இன்றி வறுமையில் வாடி,  பட்டினியால் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மலைவாழ் மக்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோல்மா தேவி வலியுறுத்திவருகிறார்.

கடந்த வாரம் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இவர் போராட்டங்களை நடத்தினார்.

ஆனால் இன்னும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கோல்மா தேவி தனது கணவருடன் ஜெய்ப்பூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் துவக்கினார்.

நேற்று இந்த உண்ணாவிரதம் 2-வது நாளாக நடைபெற்றது.

மலைவாழ் மக்களுக்காக தான் தொடர்ந்து போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்