முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா-சீனா அதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சந்திப்பு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

சன்யா(சீனா),ஏப்.14 - பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோர்களை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், உறவு மற்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவது குறித்து அவர்கள் விவாதித்தனர். 

சீனாவின் கிழக்கு கடற்கரை நகரான சன்யாவில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா,சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். மாநாட்டின் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். ரஷ்ய அதிபர் மெத்வதேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோர்களை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது உறவு, அரசியல், பொருளாதார நிலைமை குறித்து விரிவான முறையில் விவாதிக்கப்பட்டது. நேற்று சரியாக சீன நேரத்தின்படி பிற்பகல் 4 மணிக்கு சீன அதிபர் ஜிண்டோவையும் அதன் பின்னர் மெத்வேதேவ்யுைம் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். இந்தியா,ரஷ்யா,சீனா இடையே உறவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க இந்த சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டது. இந்தியா-சீனா இடையே உள்ள காகித விசா விவகாரம் மற்றும் எல்லைப்பிரச்சினை இருந்தாலும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டன. இருநாடுகளிடையே வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பதாகவும் இதை குறைக்க வர்த்தகத்தை பெருக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு தகவல் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சந்திப்பின்போது லிபியா நாட்டு விவகாரம் தொடர்பாக ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்