முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் குக், பிரையர் ஆட்டத்தால் இங்கிலாந்துஅணி சரிவில்இருந்து மீண்டது

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

அகமதாபாத், நவ. - 19 - இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் குக் மற்றும் கீப்பர் பிரையர் ஆகியோரது அபார ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில், 5 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்னை எடுத்து இருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் அலி ஸ்டார் குக் இரட்டை சதத்தை நெருங்கி க் கொண்டு இருக்கிறார். அவர் 168 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். கீப்பர் பிரையர் 84 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். இங்கிலாந்து அணி தற்போது 10 ரன் முன்னிலை பெற்று உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் கை வசம் உள்ளன. ஆனால் கேப்டன் குக் மற்றும் பிரையர் தவிர, மற்ற வீரர்களில் பெரும்பாலோ ர் பந்து வீச்சாளர்கள் தான். எனவே இந் த இரண்டு விக்கெட்டையும் இந்திய வீரர்கள் கைப்பற்றி விட்டால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 160 ஓவரில் 8 விக் கெட் இழப்பிற்கு 521 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளேர் செய்தது. பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கி லாந்து அணி இந்திய சுழற் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறு தியில் அந்த அணி 74.2 ஓவரில் அனைத் து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னி ல் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனது. 3 -வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 -வது இன்னிங்சி ல் 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 111 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கேப்டன் குக் 74 ரன்னுடனும், காம்ப்ட ன் 34 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி 128 ஓவரில் 5 விக் கெட் இழப்பிற்கு 340 ரன்னை எடுத்து இருந்தது. கேப்டன் குக் 168 ரன்னுடனு ம், பிரையர் 84 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் கோட்டை விட்ட போதிலும், 2-வது இன்னிங்சில் சுதாரித்து ஆடி ரன்னை எடுத்து வருகிறது. கேப்டன் குக் 341 பந்தில் 168 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 20 பவுண்டரி அடக்கம். அவர் ஒரு புறம் நிலைத்து ஆடி வருகிறார். கீப்பர் பிரையர் 190 பந்தில் 84 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 10 பவுண்டரி அடக்கம். தவிர, காம்ப்டன் 128 பந்தில் 37 ரன்னையும், டிராட் 17 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும், பெல் 22 ரன்னிலும் படேல் பூஜ்யத்திலும் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். ஓஜா 102 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர்கா ன் 1 விக்கெட் எடுத்தார்.
---------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago