முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: ஓஜா - புஜாரா முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், நவ. 21 - ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசைப் பட்டி யலில் பேட்டிங் மற்றும் பெளலிங்கில் இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ஓஜா இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இடது கை சுழற் பந்து வீச் சாளரான ஓஜா மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி தனது முத்திரையை பதித்தார். 

இதனைத் தொடர்ந்து அவர் பெளலர்க ளுக்கான தரவரிசையில் 9 இடம் முன் னேறி டாப் - 5 ல் இடம் பெற்று இருக் கிறார். ஐ.சி.சி.யின் சமீபத்திய பட்டிய லில் இது தெரிய வந்துள்ளது. 

அகமதாபாத்தில் இங்கிலாந்திற்கு  எதி ரான முதல் டெஸ்டில் இந்தியா 9 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற து. இந்தப் போட்டியில் ஓஜா 165 ரன் னைக் கொடுத்து மொத்தம் 9 விக்கெட் கைப்பற்றினார். 

மற்ற இந்திய வீரர்களில் ஜாஹிர்கான் டாப் - 20 ல் இடம் பெற்று இருக்கிறார். அஸ்வின் அதே இடத்தை தக்க வைத்து இருக்கிறார். கான் 1 இடம் முன்னேறி 14-வது இடத்தில் இருக்கிறார். அஸ்வின் 18 - வது இடத்தில் உள்ளார். 

ஐ.சி.சி.யின் பேட்டிங் தரவரிசையில் டாப் - 20 ல் ஒரு இந்திய வீரர் கூட இட ம் பெறவில்லை. ஆனால் புஜாரா 34 இடம் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்து இருக்கிறார். அவர் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் கேப்டனான குக் டாப் - 10 ல் இடம் பெற்று இருக்கிறார். அவர் 2- வது இன்னிங்சில் 176 ரன் எடுத்தார். இதன் மூலம் அவர் 4 இடம் முன்னேறி 7 -வது இடத்தில் இருக்கிறார். 

தவிர, இங்கிலாந்து அணியின் கீப்பரா  ன பிரையரும் டாப் - 20 ல் இடம் பெற் று இருக்கிறார். அவர் 18 - வது இடத்தி ல் இருக்கிறார். இது அவரது சிறப்பமம் சமாகும். 

இந்திய அணியின் துவக்க வீரரான சே வாக் ஒரு இடம் முன்னேறி 22- வது இடத்தில் இருக்கிறார். அகமதாபாத் டெஸ்டில் அவர் தனது 23 -வது சதத்தை  அடித்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் பெற்று இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்