முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் வங்கம்

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

குல்னா, நவ. 22 - மே.இ.தீவுக்கு எதிராக குல்னாவில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட்  டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பி ற்கு 358 ரன்னை எடுத்து உள்ளது. இந்தப் போட்டியில் அறிமுக வீரரான அபுல் ஹசன் சதம் அடித்தது ஆட்டத்தி ன் சிறப்பம்சமாகும். 10 -வது வீரராக இறங்கிய அவர் சிறப்பாக ஆடி சதம் அடி த்து வங்க தேச அணியை வலுப் பெற செய்தார். முன்னதாக நசீர் ஹொ சைன் மற்றும் மக்மதுல்லா இருவரும் அரை சதம் அடித்தனர்.  

மே.இ.தீவு அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான எட்வர்ட்ஸ் சிறப்பாக பந்து வீசி 5 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆத ரவாக சம்மி பந்து வீசினார். 

வங்கதேசம் மற்றும் மே.இ.தீவு அணிக ளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி குல்னா நகரில் உள்ள ஷேக் அபு நாசர் அரங்கத்தில் நேற்று துவங்கி யது. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி பேட்டிங்கை தே ர்வு செய்தது. அந்த அணி சார்பில் தமீம் இக்பால் மற்றும் நஜிமுதீன் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

வங்கதேச அணி இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சி ல் 86 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்னை எடுத்து இருந்தது. 

வங்கதேச அணியின் இன்னிங்சில் 10 -வது வீரராக இறங்கிய அபுல் ஹசன் சதம் அடித்தது முதல் நாள் ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அறிமுக வீரரான அவர் 108 பந்தில் 100 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கமால் இரு க்கிறார். இதில் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். 

மக்மதுல்லா 89 பந்தில் 72 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 9 பவுண்டரி அடக் கம். தவிர, நசீர் ஹொசைன் 68 பந்தில் 52 ரன் எடுத்தார் . இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

இறுதியில் அவர் பெர்மாள் வீசிய பந் தில் எட்வர்ட்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தமீம் இக்பால் 70 பந்தி ல் 32 ரன்னையும், சக்ரியார் நபீஸ் 49 பந்தில் 26 ரன்னையும், கேப்டன் முஸ்பிக ர் ரகீம் 81 பந்தில் 38 ரன்னையும், ஷாகி ப் அல் ஹசன் 17 ரன்னையும், நயீம் இஸ்லாம் 16 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான எட்வர்ட்ஸ் 81 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் வீழ் த்தினார். தவிர, சம்மி 2 விக்கெட்டையு ம், பெர்மாள் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago