முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் கிளப் கெளரவிக்கிறது

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 22 - மும்பையில் உள்ள புகழ் பெற்ற பிர போர்ன் அரங்கத்தின் 75 -வது ஆண்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. இதில் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் கிளப் கெளரவிக்கிறது. 

இந்த விழாவின் போது, டெண்டுல்கரு க்கு உலக கிரிக்கெட்டின் முதல் குடிம கன் (பர்ஸ்ட் சிட்டிஜன் ஆப் தி வேர்ல் டு ஆப் கிரிக்கெட்) என்ற கெளரவத்தை இந்திய கிரிக்கெட் கிளப் அளிக்கிறது. கிளப் வெளியிட்டுள்ள பத்திரிகை அறி க்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரி யத்தின் தலைவரான என். ஸ்ரீநிவாசன் பங்கேற்க இருக்கிறார்.  

தவிர, இந்த விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான அலி ஸ்டார் குக், டீம் டைரக்டர் ஆன்டி பிள வர் , பேட்டிங் பயிற்சியாளர் கிரகாம் கூச் ஆகியோரும் பங்கேற்பார்கள் என் றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப ட்டு உள்ளது. 

இந்திய கிரிக்கெட் கிளப்பின் அறையில் தங்க வேண்டுமானால் 18 வயது நிரம் பிய வீரராக இருக்க வேண்டும் என்பது விதியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

ஆனால் டெண்டுல்கர் 14 வயதில் 1980 களில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளை யாடிய போது, இந்த கிளப்பில் விதி விலக்கு அளிக்கப்பட்டு அவர் அறைய பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனை டெண்டுல்கர் நன்றிப் பெ ருக்குடன் நினைவு கூர்ந்தார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வா ரியத்தின் உறுப்பினராக இந்திய கிரிக்கெட் கிளப் உள்ள போதிலும் தேசிய அளவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியில் அந்த கிளப் பங்கேற்கவி ல்லை. 

முன்னதாக அனைத்து சர்வதேச டெஸ் ட் போட்டிகளும், மும்பையைப் பொ றுத்தவரை பிரபோர்ன் அரங்கத்திலே யே நடைபெற்று வந்தன.

அதன் பிறகு 1970 களில் மும்பையில் வாங்க்டே அரங்கம் கட்டப்பட்ட பிற கு, இங்கு அனைத்து சர்வதேச போட்டி களும் மாற்றப்பட்டன. 

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கும், இந் திய கிரிக்கெட் கிளப்பிற்கும் இடையே நீண்ட காலமாக சீட் ஒதுக்குவது குறித் து பிரச்சினை நிலவியதால் இந்த மாற் றம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. 

கடந்த 2011 -ம் ஆண்டு உலகக் கோப் பை போட்டிக்காக வாங்க்டே அரங்க ம் புதுப்பிக்கப்பட் ட போது, பிரபோ ர்ன் அரங்கத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெற்றன. 

இதற்கிடையே கடந்த 2009 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா இலங்கை அணிகள் மோதிய ஒரே ஒரு போட்டி மட்டும் இந்த அரங்கத்தில் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்