முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க நிதி உதவி

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மாமல்லபுரம்,​நவ.25 - திருப்போரூரில் உள்ள அருள்மிகு சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை புனரமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி முருகன் திருக்கோயிலை அமைத்தவராக கருதப்படும் சிதம்பர சிவஞான சுவாமிகள் வசித்துவந்த இடம் சிதம்பர சிவஞான சுவாமிகள் மடமாக பராமரிக்கப் பட்டு வந்தது. பல ஆண்டுகளாக இம்மடம் சிதிலமடைந்து விரிசல்கள் விட்டு கட்டிடம் பாழ்பட்டு கிடந்தது. திருப்போரூர் முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் மடத்தை சீரமைக்க இந்து அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைத்துவந்தனர். இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோயில்களை பராமரிக்கும் வகையில் இந்து அறநிலையத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து பழனி, திருப்போரூர் உள்ளிட்ட  பல கோயில்களில் பராமரிப்பு செய்ய உத்தரவிட்டார். அந்த நிதியில் திருப்போரூர் சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது . 

அதன் பின்னர் சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்கும் பணியை துவக்க இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்போரூர் முருகன் கோயில் நிர்வாகம் மேற்க்கொண்டது அதற்கான பரிகார பூசைகள் நடைபெற்றது. பின்னர் பாலாலயம் செய்து கோயில் மடம் மூடப்பட்டு சீரமைப்பு திருப்பணிகள் துவங்கியது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்