முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தா நுழைய தடை கோரிய வழக்கு தள்ளி வைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,நவ.25 - மதுரை ஆதீமமடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை கோரிய வழக்கு வருகிற 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மதுரை ஆதீனமடத்தின் இளையஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த நியமனத்திற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை மதுரை ஆதீனமடத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதை தொடர்ந்து மடத்தில் இருந்த நித்தியானந்தாவின் சீடர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் மதுரை ஆதீனம் சார்பில் நித்யானந்தா மற்றும்அவரது சீடர்கள் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும், நித்தியானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய அறக்கட்டளையை கலைக்க சம்பந்தப்பட்ட பதிவாளர் உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

   இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி குருவையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நித்தியானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதைதொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்