முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு, பொங்கல் தினங்களில் தங்கம்விலை பவுனுக்கு ரூ.25,000 தாண்டுமாம்!

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 26 - கடந்த சில தினங்களில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ. 24 ஆயிரத்து 480 ஐ எட்டியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் முடிந்த தீபாவளி பண்டிகையின் போது தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ. 23 ஆயிரத்து 860 வரை விற்கப்பட்டது. அடுத்தடுத்து வரும் பண்டிகையில் ஒரு பவுன் ரூ. 24 ஆயிரம் வரை உயரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதையும் மீறி தற்போது 24 ஆயிரத்து 500 வரை விற்கப்படுகிறது. கடந்த 22 ம் தேதி நிலவரப்படி ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 2 ஆயிரத்து 999 க்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு பவுன் ரூ. 23 ஆயிரத்து 992 க்கு விற்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ரூ. 3 ஆயிரத்து 22 க்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு பவுன் ரூ. 24 ஆயிரத்து 176 ஆக இருந்தது. சனிக்கிழமை ஒரு கிராமுக்கு ரூ. 38 உயர்ந்து ரூ. 3 ஆயிரத்து 60 க்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு பவுனுக்கு ரூ. 304 உயர்ந்து ரூ. 24 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டும் என வர்த்தகர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்