முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சலைட்டுகளுடன் மம்தா தொடர்பு இடதுசாரி கட்சிகள் புகார்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா

கொல்கத்தா, ஏப்.15-நக்சலைட்டுகளுடன் மம்தா கட்சிக்கு தொடர்புள்ளதால் மேற்கு வங்க தேர்தலுக்கு அச்சுறுத்தல் கிருப்பதாக இடதுசாரி கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி- மாவோயிஸ்ட் தொடர்பு, கூர்காலாந்து பிரச்சனை ஆகியவற்றால் மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இடதுசாரி கட்சிகள் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிகள் கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 11ம் தேதி மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்ட அறிக்கையில் இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் அது போன்று திரிணாமுல் கட்சிக்கு எந்தவித மிரட்டலும் விடுக்கப்படவில்லை. நக்சல்கள், திரிணாமுல் கட்சிக்கு இடையேயான தொடர்பு காரணமாக தேர்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தேர்தலிலன்போது மற்ற கட்சிகளுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம். அதுபோல டார்ஜிலிங் மலைப்பகுதிகளை இணைத்து தனி கூர்க்காலாந்து மாநிலம் அமைக்கப்போராடி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினராலும் தேர்தல் அமைதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!