முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பரைக் கொலைசெய்த மியான்மர் பிரஜை கொச்சியில் கைது

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கொச்சி, ஏப்.16 - உயர்படிப்புக்காக தனது நண்பருடன் கொச்சி வந்த மியான்மர் நாட்டு மாணவர் தனது நண்பனையே கொலை செய்த குற்றத்திற்காக கொச்சியில் கைது செய்யப்பட்டார். மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் தாமஸ் (30) இவரது நண்பர் ஜோசப் (27). இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா என்ற இடத்தில் உள்ள வேதாகம கல்லூரியில் உயர்படிப்பு படிப்பதற்காக மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா வந்தனர். இவர்கள் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் விடுமுறையில் வேலைபார்த்து பணம் சம்பாதிப்பதற்காக கொச்சி நகருக்கு வந்தனர். கொச்சியில் உள்ள ஒரு சிறிய லாட்ஜில் ரூம் எடுத்து வாடகைக்கு இருந்தபடி இவர்கள் இருவரும் கொச்சியில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தாமஸ் தனது நண்பன் ஜோசப் மீது  பெரிய செங்கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை பிளந்த நிலையில் ஜோசப் துடிதுடித்து கீழே விழுந்தார். இதனால் சம்பவ இடத்திலேயே ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த கொச்சி போலீசார் ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தாமசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!