முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா பிட்ச் கியூரேட்டருக்கு கல்தா கொடுக்க முடிவா?

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, நவ.- 29 - மும்பையில் தோனிக்கு சாதகமான பிட்ச் அமைத்துக் கொடுத்தும் அதில் வெல்ல முடியாமல் போய் சர்ச்சை வலுத்துள்ள நிலையில் மறுபடியும் தோனிக்கு ஆதரவான ஒரு நிலையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. கொல்கத்தா ்டன் கார்டன் பிட்ச்சையும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான முறையில் அமைக்குமாறு தோனி கோரியுள்ள நிலையில் அதற்கு சாதகமானவராக இல்லாத கியூரேட்டர் பிரபீர் முகர்ஜியை அங்கிருந்து மாற்றுமாறு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மும்பை வாங்கடே மைதான பிட்ச்சை சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக அமைக்குமாறு தோனிதான் கோரியிருந்தார். அவரது கோரிக்கைக்கேற்ப பிட்ச்சும் அமைக்கப்பட்டது. ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களால் அதை திறம்பட பயன்படுத்த முடியவில்லை. மாறாக, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அதை சரியாக பயன்படுத்தி திறமையாக பந்து வீசி இந்தியாவை நிலை குலைய வைத்து ஆட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக வென்று விட்டனர். ஆனால் தோல்விக்கு பிட்ச்சில் பந்துகள் சுழன்று வராமல் போனதே காரணம் என்று கூறியிருந்தார் தோனி. இதற்கு வாங்கடே பிட்ச்சின் கியூரேட்டர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொல்கத்தா ்டன் கார்டன் பிட்ச்சையும் பந்து நன்றாக சுழன்று வரக் கூடிய வகையிலான பிட்ச்சாக மாற்ற வேண்டும் என்று தோனி கூறியிருக்கிறார். இதற்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அப்படிச் செய்தால் தற்போது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் பார்முக்கு, நமது பேட்ஸ்மேன்கள் திணறிப் போக நேரிடும். பெரும் பாதகமாக அமையும் என்பது கங்குலியின் கருத்து.

ஆனால் கிரிக்கெட் வாரியமே தோனியின் பேச்சை மட்டுமே கேட்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ்டன் கார்டன் பிட்ச் கியூரேட்டர் பிரபீர் முகர்ஜியை அங்கிருந்து மாற்றி விட்டு, கிழக்கு மண்டல கியூரேட்டர் ஆசிஷ் பெளமிக்கை அந்த இடத்தில் நியமிக்குமாறு பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளதாம் கிரிக்கெட் வாரியம். பிரபீர் முகர்ஜி, தோனி சொல்வதைக் கேட்க மாட்டார் என்பதால்தான் இந்த மாற்றமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்