முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெர்த், நவ. 30 - ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கே ப்டனான ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதா  க நேற்று அறிவித்து இருக்கிறார். கடந்த 17 வருடகாலமாக அவர் சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தார். இதன் மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.  

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலி ய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியுடன் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். 

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களி ல் ஒருவரான ரிக்கி பாண்டிங் ஆஸ்தி ரேலிய அணியின் மிடில் ஆர்டரில் கடந்த பல வருடங்களாக ஜொலித்து வந் தது குறிப்பிடத்தக்கது. 

பெர்த் நகரில் நடைபெற்ற பத்திரிகை யாளர்கள் கூட்டத்தின் போது, பாண்டி ங் இந்த முடிவை நேற்று அறிவித்தார். தனது விருப்பம் போல ஆட முடியவி ல்லை என்றும், சமீப காலத்தில் தனது பார்ம் மோசமாக இருப்பதால் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். 

அடுத்த மாதம் 38 வயதை எட்டும் பா  ண்டிங் இதுவரை 167 டெஸ்ட் போட்டி களில் ஆடி மொத்தம் 13,366 ரன்னை எடுத்து இருக்கிறார். இதன் சராசரி 52.21 ஆகும். 

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டெண்டுல்கர் 192 டெஸ்டில் ஆடி மொத்தம் 15,562 ரன்னை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக பாண்டிங் 2- வது இட த்தில் இருக்கிறார். 

1995 -ம் வருடம் இலங்கைக்கு எதிராக பெர்த் நகரில் நடந்த டெஸ்டில் அறிமு கமான பாண்டிங் தற்போது அதே நகரி ல் நடக்க இருக்கும் டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார். 

தவிர, 375 ஒரு நாள் போட்டியில் ஆடி யுள்ள ரிக்கி மொத்தம் 13,704 ரன்னை எடுத்து இருக்கிறார். இதில் 30 சதம் அடி த்து இருக்கிறார். அதிகபட்சமாக 164 ரன் எடுத்து இருக்கிறார். சராசரி 42.03 ஆகும். 

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாள் போ  ட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஒரு நாள் போட்டியில பங்கேற்க வில்லை. 

ஓய்வு குறித்து பாண்டிங்கிடம் கேட்ட போது, ஆஸ்திரேலிய அணியில்  நீடி க்கும் அளவில் தனது பார்ம் சரியாக இல்லை என்றும் எனவே ஓய்வு முடி வை எடுத்ததாக அவர்  தெரிவித்தார். 

மேலும், ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் வீரர்களுக்கு தே வையான அளவிற்கு எனது ஆட்டம் சரியாக அமையவில்லை. கடந்த 12 - 18 மாத காலமாக எனது ஆட்டம் மோச மாக இருந்தது. எனவே தீர ஆலோச னை செய்த பிறகு இது தான் ஓய்வு பெற சரியான தருணம் என்று நான் முடிவு செய்தேன் என்றும் பாண்டிங் தெரிவித் தார். 

பெர்த் நகரில் நடந்த இந்த பத்திரிகை யாளர் கூட்டத்தன் போது, பாண்டிங்கு டன் ஆஸ்திரேலிய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. 

பாண்டிங் டெஸ்ட் போட்டியில் மொ த்தம் 41 சதம் அடித்து இருக்கிறார். அதி க சதம் அடித்த வீரர்களில் 3-வது இடத் தில் இருக்கிறார். டெண்டுல்கர் 51 சதத் துடன் முதலிடத்திலும், காலிஸ் 44 சதத் துடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 

அவர் இந்திய அணிக்கு எதிராக 29 டெ ஸ்டில் 51 இன்னிங்சில் ஆடி மொத்தம் 2,555 ரன்னை எடுத்து இருக்கிறார். இத ன் சராசரி 54.36 ஆகும். 

கடந்த 2003-ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரிக்கி அதிகபட்சமாக 257 ரன்னை எடுத்து இருக்கிறார். 

தவிர, பாண்டிங் இந்திய அணிக்கு எதி ராக 3 முறை இரட்டை சதமும், 5 சத மும், 12 அரை சதமும் அடித்தது நினைவு கூறத்தக்க அம்சமாகும். 

இந்த ஓய்வு முடிவின்  போது பாண்டி ங்கின் மனைவி ரியன்னா, அவரது இர ண்டு மகள்கள் எம்மி மற்றும் மட்டிசே மற்றும் மேனேஜர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்