முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி பாடகி சித்ரா மகள் உடல் அடக்கம் சென்னையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான பின்னணி பாடகி சித்ரா மகள் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8 வயது மகள் நந்தனா, நீnullச்சல் குளத்தில் விழுந்து பலியானார். பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மெழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது.

இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர். துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தெழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார்.

சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கெண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த nullச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கெண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா.

சிறுமி நந்தனாவின் உடல் நேற்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர். இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள்  குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவர் உடல் சாலிகிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்