முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் ரூ.10 கோடி மோசடி

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.4 - தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் ரூ.10 கோடி ஏமாற்றி விட்டதாக திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம்  புகார் அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-  

விஜய் கதாநாயகனாக நடித்த காவலன் திரைப்படத்தில் தமிழ்நாடு உரிமையை நான் பெற்றேன். அதில் செங்கல்பட்டு ஏரியா உரிமையை சன் குழுமத்தினர் வாங்கினர். இந்த வகையில் சன் குழுமத்தினர் எனக்கு தரவேண்டிய ஆறே முக்கால் கோடி ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டனர். சன் குழுமத்தை சேர்ந்த கலாநிதி மாறன், கண்ணன், ஆர்.எம்.ரமேஷ், செந்தியல் ஆகியோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சன் குழுமத்தினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப்பூச்சிகளாக உள்ளனர். சன் குழுமம் திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இவர்களால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் இதை வெளியில் சொல்லமுடியவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? சன் தொலைக்காட்சிக்கு உரிமம் பெற்றுவிட்டு அவர்களது அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் என் படத்தை ஒளி பரப்பினார்கள். உரிமம் பெற்ற வகையில் எனக்கு சன் குழுமத்தினர் ஆறே முக்கால் கோடி ரூபாய் தர வேண்டும். வட்டியுடன் சேர்த்து ரூ.10 கோடி தர வேண்டும். அவர்களால் எனது தொழில்கள் அனைத்தும் முடங்கி போய் விட்டன. நான் கொடுத்துள்ள புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony