முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் - வைகை அணையில் நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஆண்டிபட்டி,ஏப்.16 - வரும் ஏப்.18-ஆம் தேதி மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவை ஒட்டி வைகை ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.மதுரையில் வைகை ஆற்றில் சித்திரை பவுணர்மியை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.இதனை காண தமிழ்நாடு மட்டும் மல்லாது அண்டை மாநிலம்,வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர்கள் வருகை தருவார்கள்.மதுரையே பக்தர்களின் வெள்ளத்தில் காட்சியளிக்கும்,பக்தர்களின் கரகோஷத்திற்கு இடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் காட்சி நடைபெற உள்ளது.இதனையொட்டி  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் நீர்தேக்கப்பட்டது.நேற்று மாலை நிலவரப்படி 1500 கனஅடியும் காலை முதல் 1000 கனஅடியில் மாலையில் 500 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.வைகை அணையில் 54.59 அடி நீர் இருப்பு உள்ளது.குடிநீருக்காக இது வரை தினந்தோறும் 60 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது.2654 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ளது.நீர் வரத்து இல்லை.கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் அளவு 31.6 அடியாக இருந்தது.பெரியாறு அணையில் 117 அடி நீர் இருப்பு உள்ளது.நீர் வரத்து 60 கன அடியாக உள்ளது.நீர் வெளியேற்றம் 50 கன அடி மொத்த கொள்ளளவு 2195 மில்லியன் கன அடி ,பெரியாறு அணையில் மழையின் அளவு 6 மி.மீ ,தேக்கடியில் 10 மி.மீ ,கூடலூர் 20 மி.மீ ,போடி 4 மி.மீ ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis