முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை சங்கரமடம் காவலாளி படுகொலை

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை. ஏப்.16 - புதுக்கோட்டையில் சங்கரமடம் காவலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சங்கரமடத்திற்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு சங்கராச்சாரியாரின் திருஉருவச்சிலை மற்றும் ராஜேஸ்வரி அம்மன் சிலை போன்றவை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டைக்கு சங்கராச்சாரியார் வருகை தந்தால் இந்த மடத்தில்தான் தங்குவது வழக்கம். மேலும் இங்குள்ள ராஜேஸ்வரி அம்மனை, சங்கராச்சாரியாரையும் அப்பகுதி மக்கள் தினமும் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த மடத்தில் இரவு நேர காவலாளியாக புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடி சிவானந்தபுரத்தை சேர்ந்த பழனியப்பன் (60) என்பவர் வேலைப்பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மடத்தை சேர்ந்த குருக்கள், ஊழியர்கள் அனைவரும் மடத்தை nullட்டிவிட்டு சென்று விட, பழனியப்பன் மட்டும் இரவு நேரகாவல் பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை மடத்தின் குருக்கள் சந்திரசேகர் மடத்திற்குள் வந்தார். அப்போது காவலாளியை காணாமல் திடுக்கிட்ட சந்திரசேகர் அவரை தேடினார். அப்போது மடத்திற்கு உள்ள உள்ள நூற்றாண்டு விழா மணிமண்டபத்தில் யாரோ ஒருவர் படுத்திருப்பதை பார்த்த குருக்கள், படுத்திருப்பது காவலாளிதான் என அறிந்து அவரை எழுப்புவதற்காக சென்றனர். அருகில் சென்றுபார்த்தபோது காவலாளி பழனியப்பன் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குளுக்கள் உடனடியாக போலீசாருக்கும், மடத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து டி.எஸ்.பி.மாணிக்கம், புதுக்கோட்டை நகர போலீஸ் இன்பெக்டர் அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காவலாளியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கரமடத்திற்குள் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை தடுத்ததால் காவலாளி வெட்டிபடுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பழனியப்பனுக்கு அன்னnullரணி என்ற மனைவியும், 2மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சங்கரமட காவலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மடம் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி.யும் விரைந்து வந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்