முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு ஆதரவு திரட்ட தமிழக குழு குஜராத் செல்கிறது

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.7 - குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழக பாரதீய ஜனதா குழுவினர் செல்கிறார்கள். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில செயலாளர் எச்.ராஜா உள்பட 20 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த குழுவினர் நேற்று குஜராத் புறப்பட்டு சென்றனர்.

முதல்​ மந்திரி நரேந்திரமோடி போட்டியிடும் மணிநகர் தொகுதியில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதியில் மோடிக்கு ஆதரவாக தமிழக பா.ஜனதா குழுவினர் பிரசாரம் செய்கிறார்கள்.அதேபோல் தமிழர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளில் 7 பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். இன்று ஆமதாபாத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் பொன்.ராதகிருஷணன் பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்