முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர் உறுப்பினர்களுக்கு அரசு உதவி தொகை உயர்வு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.7 - தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு   தலைமையில் நேற்று (6.12.2012) கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  அமைச்சர்  கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்  கடன் பெற அவர் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் பங்கு செலுத்த வேண்டும். நலிவுற்ற மக்கள்  குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள், மாற்றுத்திறளாளிகள்,  ஆகியோருக்கு வட்டியில்லாக்  கடன்களை  அரசு அளித்து வருகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் கடன் பெற பங்குத் தொகையாக ரூ.10 தொகையை பங்குமூலதனமாகக் செலுத்த வேண்டும். இதுவரை ரூ.250 பங்குத் தொகையை அரசு செலுத்தி வந்தது. இதனை பயனாளிகள் ஐந்தாண்டுகளில் திரும்பச்செலுத்த வேண்டும். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் பொருத்தமட்டில்  அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டும்  அவர்கள் அதிக அளவில் கடன் பெற்று  அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக   அவர்கள் சங்கத்திற்கு  செலுத்த வேண்டிய பங்குத்தொகைக்கென  ரூ.2500/-​ ஆக உயர்த்தியதுடன், இதனை திருப்பி செலுத்தாத மான்யமாக தமிழ்நாடு முதலமைச்சர் அரசு வழங்கியுள்ளது. மானியமாக  40000 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில்  ரூ.10 கோடியை  தமிழ்நாடு முதலமைச்சர்  அரசு அளித்துள்ளது.  இதன் மூலம் இவர்கள் பயிர்கடன்கள்  மட்டுமல்லாது  வேளாண்மை சார்ந்த முதலீட்டுக் கடன்களை  ரூ.50,000 வரையில் கடன்  பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் வாங்கிய உறுப்பினர்கள் தாம் பெற்ற கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தினால் அவர்கள் பெற்ற பயிர்க்கடனுக்கான வட்டியை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது. 

சிறு தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் பொருளாதார வாழ்வினை மேம்படுத்தவும்  முதலமைச்சரின் ஆணையின்படி 25.8.2001 அன்று பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டி டீ என்னும் பெயரில் தேயிலை விற்பனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஊட்டி டீ சரியான அளவில் மணம் மற்றும் தரம் ஆகியவற்றுடன் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய  முதலமைச்சர்  வழிவகுத்துள்ளார்.     2001-​2002ஆம் ஆண்டில் 11.94 லட்சம்  கிலோவாக இருந்த ஊட்டி டீ விற்பனை 2011-​12ஆம்  ஆண்டில் 27.40 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது.  இதில் முதலமைச்சரின் சாதனை என அமைச்சர் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  ப. அண்ணாமலை கூடுதல் பதிவாளர்கள்  அ. சங்கரலிங்கம்,  இரா. கார்த்திகேயன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள்   கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்