முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`விஸ்வரூபம்' படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.14 - கமலின் விஸ்வரூபம் படம் வெளியாகும் அதேநாளில் டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்ப ஏற்பாடு நடக்கிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த புதிய முறையால் திரையரங்குகளை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

விஸ்வரூபம் படம் ஹாலிவுட்டுக்கு இணையான தொழில்நுட்பத்துடன் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. கமலே இயக்கி நடித்துள்ளார். முதல் முறையாக ஆரோ 3டி என்ற நவீன ஒலி தொழில்நுட்பமும் இப்படத்தில் புகுத்தப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழா வருகிற 7-​​ந்தேதி நடக்கிறது. படத்தை ஜனவரி 11-​ந்தேதி ரிலீஸ் செய்ய கமல் திட்ட மிட்டுள்ளார். விஸ்வரூபம் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாளில் டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும் என்றும், தியேட்டர்களுக்கு போகாதவர்களையும் படம் பார்க்க வைக்க முடியும் என்றும் கமல் கருதுகிறார். 

இதற்காக படத்தை டி.டி.எச். நிறுவனத்துக்கு விநியோகம் முறையில் குறிப்பிட்ட தொகைக்கு விற்றுவிட முடிவாகி உள்ளது. டி.டி.எச். நிறுவனத்தினர் ஒரு இணைப்புக்கு ரூ.1000 அல்லது அதற்கு மேல் வசூலித்துக் கொள்ளலாம். இதன்மூலம் குடும்பத்தினர் அனைவரும் ஆயிரம் ரூபாயில் வீட்டில் இருந்தே டி.வி.யில் படத்தை பார்க்கலாம். தியேட்டர்களில் திரையிடுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது படம் ரிலீசாவதற்கு முந்தின நாள் இரவு ஒரு காட்சி மட்டும் டி.டி.எச்.சில் விஸ்வரூபம் திரையிடப்படும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கமல் சந்தித்து பேசி அவர்களிடம் ஆதரவு கேட்டார். திரையுலக சங்கத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டி இதுபற்றி முடிவு செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதனை எதிர்த்துள்ளனர். கமலை பின்பற்றி எல்லா படங்களையும் டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப முடிவெடுத்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என அவர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் பங்கேற்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் கூறும்போது, விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவது என்பது சீரியஸ் பிரச்சினை. இதுகுறித்து தியேட்டர்காரர்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago