முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் இல்லையாம்: கர்நாடகத்திற்கு கண்டனம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

பெல்காம், டிச.7 - தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்திருக்கிறார். இதற்கு சட்ட வல்லுனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெல்காமில் கர்நாடகா அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக் குறையால் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது என்றார். மேலும் கர்நாடகா மாநில எம்.பிக்களுடன் இன்று இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்திருப்பதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானாலும் கர்நாடகா ஒருபோதும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட குறைந்தபட்ச காவிரி நீரும் கூட தமிழகத்துக்கு திறந்துவிடப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் தண்ணீர் திறக்க முடியாது என்ற கர்நாடகத்தின் பிடிவாதத்தை சட்ட வல்லுனர்கள் கண்டித்துள்ளனர். காவிரி ஆணையம், கண்காணிப்புக்குழு, உச்சநீதிமன்றம் என்று எத்தகைய அமைப்புகள் உத்தரவிட்டாலும் அதை கர்நாடகம் மதிப்பதில்லை. எனவே அதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்ட வல்லுனர்கள் கண்டித்துள்ளனர். அடுத்த ஆண்டு வரும் சட்டசபை தேர்தலைத் தான் நினைக்கிறார்கள். தமிழக விவசாயிகள் பற்றி நினைப்பதேயில்லை. அதனால் தான் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்