முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரை நேரில் சந்தித்து நாஞ்சில் சம்பத் நன்றி

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.5 - முதல்வர் ஜெயலலிதாவை நாஞ்சில் சம்பத் நேரில் சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வின் கொள்கை  பரப்பு துணைச் செயலாளராக நியமித்ததிற்கு நன்றி தெரிவித்தார். கடந்த 4-ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் ம.தி.மு.க.  கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் நாஞ்சில் சம்பத்  நியமிக்கப்படுவதாகவும், கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதையொட்டி நேற்று முதல்வர் ஜெயலலிதாவை நாஞ்சில் சம்பத் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை

நேற்று (7.12.2012  வெள்ளிக் கிழமை), கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள  நாஞ்சில் சம்பத்  நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து ஆசி பெற்றார். 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago