முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்ட விவசாயிகள் நடத்திய பந்த் வெற்றி

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

தஞ்சை. டிச.8 - தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நடந்த முழு கடையடைப்பு மாபெரும் வெற்றி பெற்றது. ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.

நடந்தாய் வாழி காவேரி என பாடிய வைர வரிகள் நேற்று தவழ்நேதாய் வாழி கவேரி என கூறும் அளவிற்கு கூட தண்ணீர் வராத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தார்மீக உரிமையைக்கூட பெறமுடியாத அவல நிலையில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை முறையாக கர்நாடகம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடகம் அடாவடித்தனத்தை கையாண்டு வருகிறது. கர்நாடகத்தின் முரட்டு பிடிவாதத்தால் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் அழிந்துபோய் உள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தை கண்டிக்கும் வகையில் முழுஅடைப்பிற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அந்த அழைப்பை ஏற்று தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

தஞ்சை நகரில் காந்திஜிரோடு, ரயிலடி, அண்ணாசாலை, கீழவாசல், அய்யங்கடைத்தெரு, மருத்துரக்கல்லூரி சாலை, கரந்தை போன்ற நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஆதரவு தந்தனர்.

தஞ்சை ரயிலடியில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க தலைவருமான பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் தலைமையில் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், செற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், அபிமன்னன், கரிகாலன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க தலைவர் இராமநாதன், திருப்பதி, அர்ச்சுணன், கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைதானார்கள்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் திரு​ஞானம், காக்கரை சுகுமார், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நாஞ்சி வரதராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

அதேபோல் திருவையாறில் மாவட்ட குழு உறுப்பினர் ராமு, வட்டாரசெயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் சாலைமறியல் செய்தனர். 41 பேர் கைதானார்கள், நடுக்காவேரியில் அம்பலராஜ், மூக்கையன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு 22 பேர் கைதானார்கள்.

வரகூர் சாலையில் ராமலிங்கம் தலைமையில் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ஜீவக்குமார் உள்ளிட்ட 21பேர் சாலை மறியல் செய்து கைதானார்கள்.

பாபநாசத்தில் காதர்உசேன், சாமுதர்மராஜ், ஜெயபால் ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் செய்து 200 பேர் கைதானார்கள், அய்யம்பேட்டையில் முருகேசன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 60பேர் கைதானார்கள்.

அம்மாப்பேட்டை அடுத்துள்ள ராமுத்திரைக்கோட்டையில் பக்கிரிசாமி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டு விவசாய தொழிலாளர்கள் 180 பேர் கைதானார்கள், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள் பந்த் முழு வெற்றிபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்ண்டியில் அரசு மற்றும் தயார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.  பள்ளி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்க வில்லை. கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உலகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கல் முழுமையாக பங்கேற்றுள்ளனர் என்று விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   

நாகை மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. கிராமப்புறங்களில் முழுமையாக கடையடைப்பு நடந்தது.

மாரிமுத்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. மன்னார்குடியில் விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாதன், முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், முன்னாள் சேர்மன் பாண்டியன் தலைமையில் மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, விவசாயிகள் சங்க மன்றம், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்கெனவே அறிவித்தப்படி நேற்று நீடாமங்கலத்தில் ரயில் மறியல், பெரியார்சிலை, அண்ணா சிலை ஆகிய இடங்களில் சாலை மறியல் செய்தனர். நேற்று காலை 9.40 மணிக்கு யர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை நாம் தமிழர்கள் கட்சியின் அமைப்பாளர் பாரதி செல்வன் தலைமையில் மறித்தனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்று காலை 8.45 மணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழர்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு கலியபெருமாள், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், விவசாயிகள் மன்றம் செயலாளர் சுந்தரம் ஆகியோர் தலைமையில் பஸ் மறியல் 1.45 மணி வரை 5 மணி நேரம் நடைபெற்றது. 12 மணிக்கு வரவேண்டிய திருச்சி நாகூர் பயணிகள் ரயில் 12.50க்கு வந்தது. அதையும் மறித்தனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க பொது செயலாளர் காவிரி ரெங்கநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நீடாமங்கலத்தில் தாசில்தார் பானுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago