முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைக்கு சர்வதேச விமான சேவை துவங்கியது

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், டிச. 8 - மதுரைக்கு நேற்று முதல் சர்வதேச விமான சேவை துவங்கியது. இலங்கை கொழும்புவிலிருந்து நேற்று பகல் 2.15 மணிக்கு ஏர்பஸ் ரக விமானம் மிஹின் லங்கா 120 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் பகல் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடைந்தது. இது மதுரைக்கு வரும் முதல் பன்னாட்டு விமானம் ஆகும். இதன் மூலம் பன்னாட்டு விமான சேவை மதுரைக்கு நேற்று முதல் துவங்கியுள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மதுரை விமான நிலைய இயக்குநர் சங்கையா பாண்டியன், கஸ்டம்ஸ் கமிஷனர் நயினார். துணை கமிஷனர் மீனலோசினி, அதிகாரி சந்திரசேகர், டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, பாலிகா டிராவல்ஸ் ஸ்ரீராம், வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு வரவேற்றனர். பயணிகள் மெகா சைஸ் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். அந்த விமானம் மீண்டும் மதுரையிலிருந்து 4.15 மணிக்கு இலங்கைக்கு 109 பயணிகளுடன் புறப்பட்டது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இந்த விமான சேவை இருக்கும். இந்த விமானத்தின் மூலம் உலக நாடுகள் அனைத்திற்கும் செல்பவர்கள், இந்த விமானத்தில் கொழும்பு சென்று அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியும். இதன்மூலம் மதுரையின் வர்த்தகம் பெரும் வாய்ப்புள்ளது.பயணிகளுக்கும் நேரம் மிச்சம், வசதியாகவும் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago