முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவர் மன்ற தீர்ப்பு வெளியீடு முதல்வக்கு கிடைத்த வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.9 - காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகா அணைகளில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் நீதிறக்கவும், கண்காணிப்பு குழு கூட்டவும் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவு, தமிழகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா போராட்டத்துக்கு கிடைத்த  வெற்றியாகும்

காவிரி நீர் பிரச்னையில் கர்நாடகா மாநிலத்துக்கு எதிராக, முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல், முறையீடு செய்தது தவறு. இதனால், மாநிலங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறுவிதமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. 

ஆனால், பல்வேறு விமர்சனங்களுக்கு இடையேயும் தளராமல், தமிழக முதல்வர் நீதிமன்றத்தை அணுகி, சட்ட போராட்டம் நடத்தினார். கர்நாடகா மாநில அரசு, தமிழகத்துக்கு உரிய பங்களிப்பு காவிரி நீரை வழங்க வேண்டும் என, முதலில் முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம்கோர்ட்டைஅணுகினார். இதன்பேரில் இருமாநில முதல்வர்களை பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியது.

அதன்படி, கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கர்நாடகா தொடர்ந்து, காவிரி நீரை வழங்க மறுத்ததால், உடனே சுப்ரீம்கோர்ட்டை தமிழக அரசு அணுகி, முறையிட்டது. இதன் பயனாக, சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், காவிரியில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், இரு மாநில தண்ணீர் தேவையை முடிவு செய்யும் வகையில், கண்காணிப்புக்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது தமிழக மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். 

தமிழ்நாட்டில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 14 1/2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. அந்த பயிரை காப்பாற்ற காவிரியில் 30 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர், கடந்த 5-ந்தேதி முதல் தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக மாநிலத்துக்கு கடந்த புதன்கிழமை உத்தரவிட்னர்.

அத்துடன் காவிரி கண்காணிப்பு குழு வெள்ளிக்கிழமைக்குள் கூடி, இரு மாநிலங்களின் தண்ணீர் தேவை பற்றி ஆய்வு செய்து, கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை தாங்கள் பிறப்பித்த இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். அந்த உத்தரவை ஏற்று கர்நாடகம் (6.12.12) அன்று இரவு முதல் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டு உள்ளது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி கண்காணிப்பு குழு அதன் தலைவரும், மத்திய நீர் வளத்துறை செயலாளருமான துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் பிற்பகல் கூடியது. இதில் தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.  கர்நாடக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் ரெங்கநாத்தும் மற்றும் அதிகாரிகளும் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். காவிரி கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சார்பிலும் அதிகாரிகள் பங்கு கொண்டனர். 

கூட்டத்தில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 30 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். அந்த பாக்கி தண்ணீரையும், வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொஎள்ளும் விதியின்படி இந்த மாதம் (டிசம்பர்) 6 டி.எம்.சி தண்ணீரும், அடுத்த மாதம் 1.5 டி.எம்.சி தண்ணீரும்  திறந்துவிட கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகத்தில்  பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றவும், குடி தண்ணீருக்குமே கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கூட்ட முடிவில் காவிரி கண்காணிப்பு குழு 6 பக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-

டிசம்பர் மாதம் முழுவதும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 12 டி.எம்சி தண்ணீர் தரவேண்டும். இந்த 12 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்த 12 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் போதாது. அதேசமயம் இதனால் கர்நாடகத்துக்கும் பாதிப்பு ஏற்படும். 12 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்ட பிறகு, இரு மாநிலங்களுக்கும், அவர்களின் தேவைப்படி டிசம்பர் மாதத்தில் சுமார் 47 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இரு மாநில அரசுகளும் இதனால் திருப்தி அடையாது.  இருந்தாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டால், இதுதான் இப்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வாகும். சரியான தீர்வாகவும் இருக்க வேண்டும்.

இரு மாநிலங்களின் அணைகளிலுமே நீர் இருப்பு குறைவாக உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கர்நாடகத்திலுள்ள 4 அணைகளிலும்  கடந்த 10 ஆண்டுகளில் இந்த சமயத்தில் சராசரியாக 53.70 டி.எம்.சி தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் இப்போது 36.30 டி.எம்.சி தண்ணீர்தான் உள்ளது. இத்போல் தமிழக அணையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த சமயத்தில் சராசரியாக 59.30 டி.எம்.சி தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் இப்போது 17.04 டி.எம்சி தண்ணீர்தான் உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற வழங்கிய இறுதி தீர்ப்பை இருந்தமாத இறுதிக்குள் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும். 

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட 90 நாட்களிலிருந்து அது செயல்பாட்டுக்கு வரும். நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதும்  பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு ஆகியவை தானாகவே காலாவதி ஆகிவிடும். நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி என்றும்,  டி.எம்.சி என்றும் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி என்றும், கேரளாவின் பங்கு 30 டி.எம்.சி என்றும், புதுச்சேரியின் பங்கு 7 டி.எம்.சி என்றும் கூறப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திய நிலையில் நேற்று  முன்தினம் காவிரி கண்காணிப்பு குழு நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில்  வெளியிட உத்தரவிட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த இரண்டாவது மாபெரும் வெற்றியாகும்.

பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை என இழுத்தடித்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்று, காவிரி நீரை பெற்று தந்திருக்கிறார் ஜெயலலிதா. இது அடுத்த வெற்றியாகும்.

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு வழங்கியது. அன்று முதல் இந்த தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவியாக இருந்த  போதே ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அரசிதழில்  வெளியிட வேண்டும் என்று உண்ணா விரதமும் இருந்தார்.

கடந்த முறை முதல்வராக இருந்த போது 4 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்தார். காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து தன்னை வருத்தி உள்ளார் என்பது மட்டுமல்ல, தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தியும் வந்தார். 

தற்போது  ஆட்சிக்கு வந்த (2011-ம் ஆண்டு) ஒரு மாதத்திலேயே பிரதமருக்கு ஒரு மனு அளித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிடுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

உச்சநீதிமன்றம் முன்பு இது சம்பந்தமான வழக்குகள் இருந்தால் அரசிதழில் தீர்ப்பை வெளியிடலாம். அதாவது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 பிரிவு 6(1)-ன்படி மத்திய அரசு அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடலாம் எ ன்று பிரதமருக்கு அளித்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

சட்டசபையில் காவிரி நீர் பிரச்சனை பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியபோதும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றும்  உறுதிபடக் கூறினார்.

இந்த நிலையில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவு ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மத்திய அரசின் அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட்டால் 90 நாட்களுக்குள் அந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு சட்டரீதியான பொறுப்பும் ஏற்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 ஆண்டுக்கால முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பத்திரிகைகள் பாராட்டி உள்ளன. விவசாய பெருமக்களும், பல்வேறு கட்டியினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

``காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். காவிரி பிரச்சினையில் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று கூறி கர்நாடகம் இழுத்தடி நிலையில் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடன் கோர்ட்டுக்கு சென்றார், வெற்றி பெற்றுள்ளார். கண்காணிப்புக்குழு கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்தார். அதிலும் வெற்றி கண்டார். இப்போது நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவையும் பெற்றிருக்கிறார்.

காவிரி பிரச்சினையில் முதல்வர் ஜெயலிலதா அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்திருக்கிறார்'' என்று விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டியுள்ளார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி திறன் மற்றும் விடா முயற்சியின் காரணமாக இன்று இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி பாராட்டியுள்ளார்.

இதுபோல டெல்டா பகுதியிலுள்ள பொதுமக்கள் மட்டுமின்றி அரசு வல்லுநர்கள் உட்பட பல தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி இது என்று பாராட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago