முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 7 பூத்களில் இன்று மறுவாக்கு பதிவு

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.16 -  நெய்வேலி, கிள்ளியூர், ஆரணி, திருவிடைமருதூர், போடி ஆகிய தொகுதி களுக்குட்பட்ட 7 வாக்குசாவடிகளுக்குட்பட்ட 5 சட்டபேரவை மறுவாக்கு பதிவுக்கு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தொகுதியில் சமத்திகுப்பத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 55 மற்றும் 56 ஆகிய 2 இடங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் அனந்தமங்கலம் வாக்குச்சாவடி எண் 121லும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வளையவட்டம் மற்றும் பருத்திக்குடி ஆகிய இடங்களில் உள்ள 106 மற்றும் 107 எண் கொண்ட 2 வாக்குச்சாவடிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 164லிலும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் சங்கராபுரம் வாக்குச்சாவடி எண் 146லும் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 7 வாக்குச்சாவடிகளிலும் இன்று(16ம் தேதி) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வளையவட்டம் மற்றும் பருத்திக்குடி ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும், (வாக்குச்சாவடி எண் 106 மற்றும் 107) அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை  எதிர்த்து வாக்காளர்கள் புறக்கணித்த தேர்தல், இங்கு மீண்டும் மறுதேர்தலாக இன்று நடத்தப்படுகிறது. இந்த பகுதிகளில் வேட்பாளர்களின் ஒப்புதலோடு வேறு பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பதிவு செய்வதில் நடைபெற்ற குறைபாடு காரணமாக இந்த வாக்குச்சாவடிகள் மறுதேர்தல் நடத்தப்படுகிறது. அதே போல் கடலூரில் சமூக விரோதிகளால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாக்கப்பட்டதால் இங்கு மறுதேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago