முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிரதமாராவார்: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

காஞ்சிபுரம்,டிச.9 - ​தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, ஜெயலலிதா இந்திய பிரதமாராக பதவியேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்​அமைச்சருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கட்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் ஆற்றுவது குறித்த காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்.ச.ராஜேந்திரன் எம்.பி., முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா வரவேற்றார்.

தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம்.இரா.விஸ்வநாதன், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் பணி மற்றும் கட்சி பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர். 

இக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

மக்கள் நலத்திட்டப் பணிகள் மற்றும் கழகப் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்​அமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி மாநிலம் முழுவதும் 32 நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. 33​வது நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டமாக, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதுவரை நாங்கள் நடத்திய 32 கூட்டங்களைக் காட்டிலும் காஞ்சிபுரம் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத்தினர் கலந்துகொண்டுள்ளனர். இது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்று கருதுகிறேன். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது தமிழக மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளித்து ஜெயலலிதாவை 3​வது முறையாக முதல்வராக்கினீர்கள். அதன்தொடர்ச்சியாக கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன், கறவை மாடுகள், ஆடுகள், லேப்டாப் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி, ஏழை எளிய மக்களின் வாழக்கையில் ஜெயலலிதா ஒளியேற்றி வருகிறார். பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., வழியில் முதல்வர் மக்கள் நலத்திட்டப் பணிகளை சிறப்புடன் நிறைவேற்றி வருகிறர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தை நீnullண்ட ஆண்டுகள் ஆளுகின்ற தகுதியை தமிழக மக்கள் அ.தி.மு.க.விற்கு மட்டுமே அளித்துள்ளனர். இது வரலாற்றில் அழியாத பொக்கிஷமாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டோடு 23​வது ஆண்டாக ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தமிழகத்தை ஆளுகிறது. இந்தியாவிலேயே ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக, எக்கு கோட்டையாக அ.தி.மு.க. திகழ்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று 98 சதவீதம் வெற்றி பெற்றோம். 1 லட்சம் தொண்டர்கள் இதன் மூலம் பதவிகளை பெற்றுள்ளனர். அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 18 மாதங்களில் 22 கலை அறிவியல் கல்லூரிகளும், 3 பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. புதிய மின் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் இந்த மாதம் முதல் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்ய ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக குண்டு வீசி கொல்லப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி போரை நிறுத்த ஒரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தன் பதவியையும், குடும்ப உறுப்பினர்களின் பதவியையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டார். மத்திய ஆட்சியில் தொடர்ந்து 13 ஆண்டுகள் அங்கம் வகிக்கும் தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காகவும், பாலாறு, காவிரி, முல்லைபெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட தமிழக ஜீவாதார பிரச்சினைகளுக்காகவும் எந்த நலனையும் செய்யவில்லை. ஜெயலலிதாவின் அறிவாற்றலால் காவிரி பிரச்சினையில் உச்சnullநீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதன்படி தற்போது 15 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீnullண்ட நாள் கிடப்பில் கிடந்த காவிரி நடுவர் nullநீதிமன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தியாவை ஆளுகின்ற தகுதியும், சர்வ வல்லமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது. பா.ஜ.க., தலைவர் அத்வானியே காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஒருவர்தான் பிரதமராவார் என்று தெரிவித்தார். அது உண்மையாகப்போகிறது. 

தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, வேறு சில மாநிலங்களின் ஆதரவுடன் ஜெயலலிதா இந்திய பிரதமாராக பதவியேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்திய தேச மக்கள் அனைவரும் ஜெயலலிதா பிரதமராவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஜெயலலிதாவை பிரதமராக்குகின்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக களப்பணியாற்றி, ஜெயலலிதா காலடியில் வெற்றிகனியை சமர்ப்பிக்க வேண்டும். 

இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் வாலாஜாபாத்.பா.கணேசன், மொளச்சூர்.இரா.பெருமாள், எஸ்.கணிதாசம்பத், தண்டரை.கே.மனோகரன், வி.எஸ்.ராஜி, மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி.பன்னீர்செல்வம், நகராட்சித் தலைவர் டி.மைதிலிதிருநாவுக்கரசு, ஒன்றியக்குழுத் தலைவர் தும்பவனம்.டி.ஜீவானந்தம், பல்லவன் கல்விக்குழுமங்களின் நிறுவனர் பா.போஸ், அ.தி.மு.க. நிர்வாகிகள் மண்ணூர் குட்டி என்கிற சி.வெங்கடேசன், எஸ்.ரங்கநாதன், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிநாயகம், மாங்காடு.எம்.பிரேம்சேகர், சி.என்.சந்திரன், ஆற்பாக்கம்.ராமகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.சேதுராமன், அத்திவாக்கம்.எஸ்.ரமேஷ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, தென்னேரி.என்.எம்.வரதராஜுலு, ஆதனூர்.என்.கோபால்ராஜ் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நகர செயலாளர் முடிவில் என்.பி.ஸ்டாலின் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்