முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ரிசர்வ் போலீசார்- தா.பாண்டியன்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தமிழக போலீசார் மட்டுமின்றி கூடுதலாக மத்திய ரிசர்வ் படை போலீசையும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஏப்ரல்​13 அன்று நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேர்தல், ஆணையத்தால் அமைதியாகவும், சுந்திரமாகவும் நடைபெற்றது. குறிப்பிடத்தக்கதாகும். வாக்குப்பதிவு முடிந்துள்ள போதிலும், வாக்கு எண்ணிக்கை மே​13 அன்றுதான் நடைபெறவுள்ளது. அதுவரை வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

தற்போது வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு மையங்களில் தமிழக காவல்துறையினர் பொறுப்பில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு போதுமானதாக, இருக்காது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவே வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் தமிழக காவல்துறையினரோடு கூடுதலாக மத்திய ரிசர்வ் படையினரையும் பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்