முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 330 ரன்னில்அவுட்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

நாக்பூர், டிச. - 15 - இந்திய அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன்னில் ஆட்டம் இழந்தது.  இங்கிலாந்து அணியின் இன்னிங்சில் பீட்டர்சன் மற்றும் ரூட் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து தலா 73 ரன் எடுத்தனர். தவிர, பிரையர், ஸ்வான் மற்றும் டிராட்  ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர்.  இந்திய அணி சார்பில், பையூஸ் சாவ்லா சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக் கெட்டை வீழ்த்தினார். தவிர, இஷாந்த் சர்மா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்து தடுமாறி

ய போதிலும், ரூட் , பிரையர் மற்றும் ஸ்வான் ஆகியோர் நிதானமாக ஆடி அரை சதம் அடித்து அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 145.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 330 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 4 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

முன்னணி வீராரன பீட்டர்சன் 188 பந்தில் 73 ரன் எடுத்தார். ரூட் 229 பந்தில் 73 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் பிரையர் 142 பந்தில் 57 ரன்னையும், ஸ்வான் 91 பந்தில் 56 ரன்னையும், டிராட் 133 பந்தில் 44 ரன்

னையும், எடுத்தனர்.  இங்கிலாந்து அணி சார்பில் பிரையரும் ரூட்டும் இணைந்து 6-வது விக்கெட்டிற் கு 103 ரன் சேர்த்தனர். ரூட்டும், ஸ்வானும் இணைந்து 8 - வது விக்கெட்டிற்கு 60 ரன் சேர்த்தனர். ஸ்வானும், ஆண்டர்சனும் இணைந்து 9-வது விக்கெட்டிற்கு 23 ரன் சேர்த்தனர். இந்திய அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான சாவ்லா 69 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.இஷாந்த் சர்மா 49 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடுத்தார். தவிர ஜடேஜா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.  பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி ரன் எடுக்க திணறி வருகிறது. 2- வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 41 ஓவரில் 4 விக்கெ ட் இழப்பிற்கு 87 ரன்னை எடுத்து இருந்தது.  

இந்திய அணியின் துவக்க வீரரான காம் பீர் 93 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். புஜாரா 72 பந்தில் 26 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம்.  முன்னதாக சேவாக் பூஜ்யத்திலும், டெண்டுல்கர் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்த னர். கோக்லி 11 ரன்னுடனும், கேப்டன் தோனி 8 ரன்னுடனும் களத்தில் உள்ள

னர். இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 24 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, சுழற் பந்து வீச்சாளர் ஸ்வ

ான் 1 விக்கெட் எடுத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்