முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூர் டெஸ்ட் டிரா - இங்கிலாந்து தொடரை வென்றது

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

நாக்பூர், டிச. 18 - இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடை பெற்ற 4 -வது மற்றும் கடைசி கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டி 5 -வது நாளன்று இறுதியில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி யது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கி லாந்து இந்திய மண்ணில் தொடரை வென்று உள்ளது. 

இங்கிலாந்து அணியின் 2 - வது இன்னி ங்சில் டிராட் மற்றும் பெல் இருவரும் நிலைத்து ஆடி சதம் அடித்தனர். இத னால் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அரங்கத்தில் கடந்த 13-ம் தேதி துவங்கி 17-ம் தேதி முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 330 ரன்னை எடுத்தது. பீட்டர்சன், ரூட் தலா 73 ரன் னும், பிரையர் 57 ரன்னும், ஸ்வான் 56 ரன்னும், டிராட் 44 ரன்னும், எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி 326 ரன் எடுத்தது. கோக்லி 103 ரன்னும், தோனி 99 ரன்னும், எடுத்தனர். தவிர, காம்பீர் 37 ரன்னும், புஜாரா 26 ரன்னும், அஸ்வின் 29 ரன்னும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 81 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கை ப்பற்றினார். ஸ்வான் 76 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பனேசர் 1 விக்கெட் எடுத்தார். 

அடுத்து 2- வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 154 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. அப்  போது 5- வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந் து அணியின் முதல் 3 விக்கெட்டை 94 ரன்னிற்குள் வீழ்த்தினர். அதன்  பின்பு டிராட் மற்றும் பெல் இருவரும் நிலை த்து ஆடியதால் போட்டி டிராவில் முடிந்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், டிராட் 310 பந்தில் 143 ரன் எடுத்தார். இதில் 18 பவு ண்டரி அடக்கம். இறுதியில் அவர் அஸ் வின் வீசிய பந்தில் கோக்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இயான் பெல் 306 பந்தில் 116 ரன் எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 16 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். ஜோ ரூட் 20 ரன்னுட ன் களத்தில் இருந்தார். 

இந்திய அணி சார்பில், அஸ்வின் 99 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஓஜா மற்றும் ஜடேஜா இருவரு ம் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இரு அணிகளுக்கு இடையே நடந்த இந்த 4-வது டெஸ்டின் ஆட்டநாயகனாக ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக குக் தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago