முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

கும்பகோணம்.டிச.19 - சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் சார்பில் சமுதாய எழுச்சி மாநாடு வருகிற பிப்ரவரி 5ம் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு ஆய்வுக் கூட்டத்திற்கு சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வருகைத் தந்த மாநிலத்தலைவர் மேலை நாசர் பேட்டியளித்தார். 

சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை நோக்கம் அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்துடன், சமுதாய ஒற்றுமையுடன் வளமுடன் வாழ எங்கள் பேரவை அயராது பாடுபட்டு வருகிறது. முஸ்லீம் இனத்துக்குள் திடிரென வுவுேது (தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்) திடீரென ஒரு பிளவை ஏற்படுத்தி மதக் கோட்பாடை தவறான வழியில் மக்களை அழைத்துச் செல்கிறது. இந்த இயக்கத்தில் இந்த செயலை சுண்ணத் ஜமாஅத் ஐக்கிய பேரவை வன்மையாகக் கண்டித்திருக்கிறோம். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவேரி நீர் தரமுடியாது விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் சட்ட ஆலோசகர்களை கூறிய ஆலோசனையின் படி தமிழக முதல்வர் உடனடியாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகி வரலாற்று காணாத மிகச்சரியான தீர்ப்பை நமக்குப் பெற்றுகத் தந்திருக்கிறார். மத்திய அரசு இதழில் காவிரி நடுவர் ஆணையத்தின் முடிவை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியது. இதை எங்களது சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்த தமிழக முதல்வரை மனதார பாராட்டுகிறது. 

துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லீம் இனத்தை தவறாக சித்தரித்திருந்தனர். அதை உடனடியாக அந்த திரைப்படத்தின் இயக்குநர், நடிகர் மற்றும் படத் தயாரிப்பாளர் அனைவரையும் முஸ்லீம் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவேண்டும் என்று அந்த திரைப்பட குழுவினருக்கு உத்தரவிட்டு அந்த திரைப்படத்தின் முஸ்லீம்களை பற்றிய தவறான காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் முஸ்லீம் இனத்தின் என்றும் என்றும் பாதுகாவலராக இருந்து வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். 

தமிழ்நாட்டில் வக்புவாரியத்திற்கு சொந்தமான இடங்கள் குறிப்பாக திண்டிவனம்,புந்ைதமல்லி, ராயப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள வக்பு வாரியங்களின் இடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக அந்த இடங்களை மீட்டு தருமாறு இந்தநேரத்தில் தமிழக முதல்வரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

முஸ்லீம் பெண்கள் வயது வந்த சுமார் 14, 15 வயதுகளிலேயே எங்கள் இனத்தில் திருமணம் செய்து கொடுத்து விடுவது மரபு. அதே போல எங்களுடைய தர்க்கா கோயில் பதிவு செய்யக்கூடிய திருமண பதிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதற்கு ஒரு சட்டம் ஏற்றி தரவேண்டும் என்று தமிழக முதல்வரை இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

வருகிற பிப்ரவரி 5ம் தேதி கும்பகோணத்தில் அனைத்து முஸ்லீம் சமுதாய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் சமுதாய எழுச்சி மநாடு ஒற்றுமையை நோக்கி என்று மாபெரும் மகாநாட்டை சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை மிகச் சிறப்பாக நடத்த உள்ளது. அந்த மாநாட்டில் முஸ்லீம் இனத்தின் பிறந்து, அனைத்து சமுதாய மக்களின் உள்ளங்களையும் செவிப்பறைகளையும் கவர்ந்த இசை முரசு நாகூர் ஹனிபாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டுகிறோம். 

மேற்கண்டவாறு சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை மாநிலத் தலைவர் மேலை நாசர் பேட்டியளித்தார். பேட்டியின்போது தொழிலதிபர் அகமது பாட்ஷா, பேரவை நிர்வாகிகள் ஜஹாங்கீர், தரமணி உசேன் பாட்சா, மாப்பிள்ளை அப்துல் சமது, ஆடுதுறை ஹாஜா நஜிமுதின், முகம்மது ஹவுஸ், ரசூல்மைதீன், அமானுல்லா, ஜிர்ஜிஸ், கமாலுதீன், திருவாரூர் மாவட்ட தலைவர் சுஜாவுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்